மேலும் அறிய

Crime: குளித்தலை அருகே முன்விரோதம் காரணமாக 2 பேருக்கு அரிவாள் வெட்டு

குளித்தலை நெய்தலூர் காலனியை சேர்ந்த முத்தையா மகன் ராஜேஷ் பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த ஆண்டுகளாக கரூர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ராஜலிங்கம் மகன் சுதாகர் என்பவரையும் வெட்டினர்.

2 பேருக்கு அரிவாள் வெட்டு


Crime: குளித்தலை அருகே முன்விரோதம் காரணமாக 2 பேருக்கு அரிவாள் வெட்டு



குளித்தலை அடுத்த நெய்தலூர் காலனியை சேர்ந்த முத்தையா மகன் ராஜேஷ்(30) பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 10 ஆண்டுகளாக கரூர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தனது கிராமத்தில் உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 2 பைக்குகளில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்களைப் பார்த்த ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் இங்கு யாரை பார்க்க வந்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர்களை அந்த வாலிபர்கள் தகாத வார்த்தைகளால் பேசியதோடு, முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு, அரிவாளால் ராஜேஷ் தலையில் வெட்டி உள்ளனர். இதை தடுக்க வந்த அவரது உறவினர் ராஜலிங்கம் மகன் சுதாகர்(30) என்பவரையும் வெட்டினர்.

 


Crime: குளித்தலை அருகே முன்விரோதம் காரணமாக 2 பேருக்கு அரிவாள் வெட்டு

இதுகுறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா புலிவலம் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் பிரசாந்த் என்கிற துரைசாமி(29),   சேப்பலாபட்டி  வடக்கு மேட்டு தெருவை சேர்ந்த சிங்காரம் மகன் லட்சுமணன், நெய்தலூர் காலனி குருணிக்காரத் தெருவை  சேர்ந்த கந்தன் என்கிற விக்கி, மணிவேல் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் லட்சுமணன், மணிவேல் ஆகியோர் ஏற்கனவே 2020ம் ஆண்டு பல வழக்குகளை சம்பந்தப்பட்டவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

அனுமதியின்றி சேவல் கட்டு: 2 பேர் கைது.

வாங்கல் அருகே திரு முக்கூடலூரில்  உள்ள ஒரு செங்கல் சூளை அருகே சிலர் சேவல் கட்டு நடத்துவதாக வாங்கள் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் சம்பவ இடம் சென்றார்.
அங்கு சேவல் கட்டு நடத்திக் கொண்டிருந்த 8 பேரில் கட்டளையைச் சேர்ந்த ரகு(எ) அன்பரசு(31), திருமுக்கூடலூரை சேர்ந்த திவாகர்(23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


Crime: குளித்தலை அருகே முன்விரோதம் காரணமாக 2 பேருக்கு அரிவாள் வெட்டு

 

தப்பி ஓடிய திருமுக்கூடலூரை சேர்ந்த பிரவீன்(30), செல்லகுமார்(21), சுரேஷ்(38),அரவிந்த்(30),பார்த்திபன் (எ) மொட்டை மணி(27), மகாமுனி (25) ஆகிய 6 பேரை தேடி வருகின்றனர்.


அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தேவை.

அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, 34 படுக்கை வசதிகளுடன் தற்போது, இரண்டாம் தர பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதில் உள்நோயாளிகள் பிரிவில், கர்ப்பிணிகளுக்கு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கக்கூடிய அறுவை சிகிச்சை அரங்கம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங், எக்ஸ்ரே மற்றும் நவீன பிரேத பரிசோதனை கூடம் உள்ளிட்ட மருத்துவமனை நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

விபத்துகளில் படுகாயம் அடைவோர் அவசர சிகிச்சை பெற அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை நாடுகின்றனர். அங்கு அவசர சிகிச்சை பெற போதிய வசதி இல்லாததால் கரூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்கின்றனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிலர் இறந்துவிடும் பரிதாப நிலை தொடர்ந்து வருகிறது.எனவே, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர விபத்து அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்த, அரசு முன்வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget