கரூர்: தொழிலதிபர் வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்து 102 பவுன் நகைகள் கொள்ளை
கரூர், பகுதியை சேர்ந்த பாண்டியன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமை தனது மகள் வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றுள்ளார்.
கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் வெளியூர் சென்ற நேரத்தில் அவரது வீட்டில் இருந்த ஜன்னல் கதவுகளை உடைத்து 102 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த பாண்டியன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமை தனது மகள் வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றுள்ளார்.
இந்த நிலையில் சென்னையிலிருந்து நேற்று இரவு வீடு திரும்பிய பாண்டியன் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அலமாரியில் வைத்திருந்த 102 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பாண்டியன் தனது வீட்டிலிருந்து மர்ம நபர்களால் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி ஆதாரங்களை கைப்பற்றி திருட்டு கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் டிஎஸ்பி நடராஜன் தலைமையில் கரூரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்பொழுது அங்கிருந்த ஊழியர்களை வெளியே விடாமல் கதவுகளை சாத்திவிட்டு சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 15,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அங்குள்ள அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல தரங்கம்பட்டியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் நடைபெற்ற சோதனையில் 10 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டது இந்த பணத்தையும் பறிவு செய்த போலீசார் தொடர்ந்து அங்கும் விசாரணை நடத்தி வருகின்றனர்.