Karnataka: லாட்ஜில் ஆயுள் தண்டனை கைதிக்கு காதலியுடன் இருக்க ஆஃபர்... பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சஸ்பெண்ட்!
கர்நாடக மாநிலம் தார்வாடில் உள்ள ஒரு லாட்ஜில் ஆயுள் தண்டனை கைதியை அவரின் காதலியுடன் தங்க வைத்த நான்கு போலீஸ் கான்ஸ்டபிள்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் தார்வாடில் உள்ள ஒரு லாட்ஜில் ஆயுள் தண்டனை கைதியை அவரின் காதலியுடன் தங்க வைத்த நான்கு போலீஸ் கான்ஸ்டபிள்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த 55 வயதான பச்சாகான், இர்பான் கான் என்ற நபரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அந்த பகுதியில் உள்ள சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கிறார்.
இந்த நிலையில், மற்றொரு வழக்கு ஒன்றிற்காக பச்சாகான், கடந்த சனிக்கிழமை பல்லாரி சிறையில் இருந்து தார்வாடு பகுதியில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, பெங்களூரில் இருந்து தார்வாடுக்கு வந்திருந்த தனது காதலியுடன் சிறிது நேரம் லாட்ஜில் செலவிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், பாதுகாப்புக்கு வந்த 4 காவல்துறை அதிகாரிகளுக்கு இது தொடர்பாக லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, லஞ்சம் வாங்கி கொண்ட காவல்துறை அதிகாரிகள் உப்பள்ளி - தார்வாடு பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இருவரும் தனியாக இருக்க அனுமதித்துள்ளனர்.
அதே நேரத்தில், காவல்துறை அதிகாரிகள் அறைக்கு வெளியே பாதுகாப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த கோகுல் ரோடு போலீசார், அந்த ஹோட்டலை சோதனை செய்து, போலீசார், கொலைக் குற்றவாளி மற்றும் அவரது காதலியை கைது செய்தனர்.
ஆனால் இதை முற்றிலும் மறுத்த பல்லாரி காவல்துறை அதிகாரிகள், தார்வாடு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து கான் மீண்டும் பல்லாரி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, தார்வாட் எஸ்டிஎம் கல்லூரிக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் மதிய உணவுக்காக காவல்துறை அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது பச்சாகான் தப்பிச் செல்ல முயன்று லாட்ஜுக்குள் நுழைந்ததாகவும், கானின் உதவியாளர்கள் அந்த நேரத்தில் காவல்துறையினரை கைது செய்வதிலிருந்து தடுத்ததாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பல்லாரி மாவட்ட ஆயுதப்படை (டிஏஆர்) போலீசில் காவலர்களாக இருந்த யோகேஷ்ச்சாரி, எஸ் சஷிகுமார், ரவிக்குமார் மற்றும் சங்கமேஸ் கலகி ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பச்சா கான் கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.