சிகரெட்.. ஆணுறை! பங்களா வீட்டில் நடந்தது என்ன? மாணவியின் பரபரப்பு வாக்குமூலம்! தொடரும் விசாரணை!
கன்னியாகுமரி ஜாயின்ட் சரக்கு பார்ட்டி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் சிபிசிஐடி போலீசார் 2 மணி நேரம் ரகசிய விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த வீடியோவில் அந்த வீட்டில் ஆணுறைகள், மது பாட்டில்கள், சிகரெட்டுகள், போதை பொருட்கள் இருந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி தாக்குதல் நடந்த அன்று பங்களா வீட்டில் இருந்த மாணவர்கள், மாணவிகள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கும் சென்று விசாரணை நடந்தது.
தற்போது மாணவியை தாக்கிய மாஜி காதலன் தலைமறைவாக உள்ளார். சம்பவத்தன்று நடந்த லீலைகளை வீடியோவாக செல்போனில் பதிவு செய்ததாகவும், அதில் மாணவி கள் மற்றும் அவர்களின் ஆண் நண்பர்கள் அரை நிர்வாண நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போன் எங்கு உள்ளது என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் முன்னாள் காதலன் பிடிபட்டால் இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வரலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் படி, சிபிசிஐடி போலீசாரும் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார். பங்களா வீட்டில் தாக்குதலுக்கு உள்ளான மாணவி, போதகரான அவரது தந்தையிடம் நடந்த சம்பவங்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்துள்ளனர்.
சுமார் 2 மணி நேரம் விசாரணை :
சுமார் 2 மணி நேரம் வரை விசாரணை நடத்தியதில் அந்தபெண், ”சமூக வலை தளங்களில் பரவி வரும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை ஆகும். கேக் வெட்டி கொண்டாடப்பட்ட பார்ட்டியை திசை திருப்புகிறார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை, எந்த தவறும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளார். அப்போது சில வீடியோ ஆதாரங்களை சிபிசிஐடி போலீஸ் தரப்பில் காட்டியதாகவும், அதற்கு அந்த பெண் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.





















