மேலும் அறிய
தந்தையை லாரி ஏற்றிக்கொன்ற மகன்..! காஞ்சிபுரம் அருகே கொடூரம்..!
ஒரகடம் அருகே தேவரியம்பாக்கம் நிலத்தகராறில் பெற்ற தந்தையை லாரி ஏற்றி கொன்ற மகன் கைது.
![தந்தையை லாரி ஏற்றிக்கொன்ற மகன்..! காஞ்சிபுரம் அருகே கொடூரம்..! kanchipuram son who killed his father in Devariyambakkam land dispute near Oragadam with a truck has been arrested TNN தந்தையை லாரி ஏற்றிக்கொன்ற மகன்..! காஞ்சிபுரம் அருகே கொடூரம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/06/e76d42bb8cd0c3dc85774bcdb9395ddf1675681747559109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ராமச்சந்திரன்
தந்தை மகன் சண்டை
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எத்திராஜ் (75). இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது கடைசி மகன் ராமச்சந்திரன் (40) எத்திராஜிடம் தனக்கு சேர வேண்டிய நிலத்தை கேட்டு தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை உடனடியாக தனது பேருக்கு தந்தை எத்திராஜ் எழுதி வைக்க வேண்டும் என கூறி அடிக்கடி தந்தையிடம் கடைசி மகன் ராமச்சந்திரன் சண்டையிட்டு வந்ததாகவே தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு எத்திராஜ் வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற ராமச்சந்திரன் தனக்கு உரிய நிலத்தை கொடுக்குமாறு தந்தையிடம் கேட்டு மீண்டும் தகராறு செய்து உள்ளார் .
![தந்தையை லாரி ஏற்றிக்கொன்ற மகன்..! காஞ்சிபுரம் அருகே கொடூரம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/06/4127fd90aac5610e8bf3095b8511bca11675680870116109_original.jpg)
அப்போது வீட்டில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர். இதனிடையே இன்று காலை எத்திராஜ் வயலுக்கு செல்ல சங்கராபுரம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ராமச்சந்திரன் கனரக லாரியை ஓட்டி வந்து எத்திராஜ் மீது ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.
![தந்தையை லாரி ஏற்றிக்கொன்ற மகன்..! காஞ்சிபுரம் அருகே கொடூரம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/06/44e2c9a4e9b3ec3063df8976bf3ddbb51675681507909109_original.jpg)
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஒரகடம் காவல் துறையினர் உயிரிழந்த கிடந்த எத்திராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராமச்சந்திரனை ஒரகடம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறில் பெற்ற தந்தை என்னும் பாராமல் லாரி ஏற்றி கொலை செய்த மகனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion