மேலும் அறிய
Advertisement
குழந்தைகள் கண் எதிரே மனைவியை கொலைசெய்ய முயன்ற கணவன்.. பரபரப்பு
குடும்ப பிரச்சனையை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றதால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கத்தியால் வெட்டியுள்ளார்
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சின்னாலம்பாடி ஊராட்சியில் வசித்து வரும் ரவி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணமானவர், ரவியின் இரண்டாம் மனைவி பெயர் அருணாவுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக இருவருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அருணா தன் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தன் தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் தன் பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நேற்று மீண்டும் சின்னாலம்பாடி கிராமத்தில் உள்ள தன் கணவர் ரவி வீட்டிற்கு தன் பிள்ளைகளுடன் செல்ல இருந்தார். செல்வதற்கு முன்பு சாலவாக்கம் காவல்நிலையத்தில் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும், ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் தனது கணவர் ரவியும், அவருடைய முதல் மனைவி தான் காரணமென எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்துவிட்டு, தன் உறவினர்கள் மற்றும் பிள்ளைகளுடன் கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததன் காரணமாக ஆத்திரமடைந்த ரவி கையில் அரிவாளுடன் தன் பிள்ளைகளின் எதிரே கண்மூடித்தனமாக தனது மனைவி அருணாவை வெட்ட முயற்சித்திருக்கிறார் .
குழந்தைகளின் கண் முன்னே மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த கணவர் பதைபதைக்கும் காட்சி pic.twitter.com/rak5OFZUJR
— Kishore Ravi (@Kishoreamutha) March 3, 2022
இதில் அருணாவிற்கும் அவரது சகோதரருக்கும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்ட காவல் துறையில் புகார் அளித்தும் காவலர்கள் எந்த ஒரு பாதுகாப்பும் அளிக்கவில்லை என வருத்தம் தெரிவித்தார். புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் உடனடியாக, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க:'திகிலூட்டுகிறது'.. உக்ரைன் போரால் பதறிப்போன ப்ரியங்கா சோப்ரா!! இன்ஸ்டாவில் சோக பதிவு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
இந்தியா
விளையாட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion