மேலும் அறிய

தமிழகத்தை உலுக்கிய தற்கொலை.. கண்ணீர் சிந்திய மாணவ, மாணவிகள்... நடந்தது என்ன ?

மருத்துவக் கல்லூரி நிர்வாகம், மற்றும் சக மருத்துவ கல்லூரி மாணவர்கள், மாணவிகள் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினர்.

காஞ்சிபுரம் அருகே நேற்று இரவு தற்கொலை செய்து கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவியின் உடல், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது ‌

மாணவியின் அழுகுரல் 

காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை படித்து வருகின்றன. அதேபோன்று தனியார் மருத்துவமனையிலும், ஆயிரம் கணக்கான நோயாளிகள் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றன.‌ 

இந்தநிலையில் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் பெரும்பாலும் அங்கேயே உள்ள மாணவர் மாணவியர் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். இந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று இரவு நேரத்தில் ஐந்தாவது மாடியில், மாணவி ஒருவர் அழுது கொண்டு கீழே குதிக்க முயற்சி செய்துள்ளார். அந்தப் பகுதியில் இருந்த சிலர் பார்த்துவிட்டு உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கும் பாதுகாவலர்களுக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர். 

மாடியில் இருந்து குதித்த மாணவி 

மாடியில் அழுது கொண்டிருந்த மாணவி, திடீரென மாடியில் இருந்து கீழே உதித்து தற்கொலை செய்து கொண்டார். மாடியில் இருந்து குதித்ததால், படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.‌ மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் மருத்துவக் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த மாணவி, ஐந்தாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து பொன்னேரி கரை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவியின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் , உயிரிழந்த மாணவி காதல் தோல்வியால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, கல்லூரி மாடியில் இருந்து அழுது கொண்டிருந்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி மாணவி தற்கொலை குறித்து பொன்னேரிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் சொல்வது என்ன ?

இச்சம்பவம் குறித்து காவல்துறை வட்டாரங்களை தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, பொன்னேரிக்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஏனாத்தூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் 5ம் ஆண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றிவந்த, சுமார் 23 வயது மதிக்கத்தக்க பெண் மருத்துவர் காதல் தோல்வியால், மருத்துவமனை 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

இச்சம்பவம் குறித்து தவறான தகவல்களை பதிவிடவேண்டாம், வதந்தியாக வரும் தகவல்களையும் நம்ப வேண்டாம் என தெரிவித்தனர்.‌ மேலும் உயிரிழந்த மாணவி, வேலூர் சி.ம்.சி மருத்துவமனையில் மனஅழுத்தத்திற்காக உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளார் மற்றும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, மருத்துவக் கல்லூரி மாணவியின் உடல், மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை செய்து முடிக்கப்பட்டு மாணவி உடல் அவரது தாய், மற்றும் அண்ணன் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மற்றும் சக மருத்துவ கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த மாணவி உடலுக்கு கண்ணீர் விட்டு கதறி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் மாணவியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி

எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மருத்துவர் மீது தாக்குதல்; காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - காவல் ஆணையர் விளக்கம்
மருத்துவர் மீது தாக்குதல்; காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - காவல் ஆணையர் விளக்கம்
“கத்திக்குத்துப்பட்ட மருத்துவர் பாலாஜி யார், அவர் எப்படி?” வெளியான புதிய தகவல்..!
“கத்திக்குத்துப்பட்ட மருத்துவர் பாலாஜி யார், அவர் எப்படி?” வெளியான புதிய தகவல்..!
"கத்திக்குத்து நடந்த இடத்திற்கே சென்ற துணை முதல்வர்” மருத்துவமனையில் உதயநிதி அதிரடி ஆய்வு..!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Woman Murder:  சிறுநீர் கழித்த பெண் வியாபாரி! வெட்டிக் கொன்ற ரவுடி! சென்னையில் பகீர்!Seeman NTK : சீமானுக்கு ஆப்புவைக்கும் ஆடியோ! உளவுத்துறைக்கு அதிரடி டாஸ்க்! சிக்கலில் நாம் தமிழர்Guindy doctor stabbed : அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து! HOSPITAL-ல் பகீர்! வட மாநிலத்தவர் கொடூரம்Hosur Fake Doctors : ’’10th படிச்ச நீ டாக்டரா?’’ டோஸ் விட்ட அதிகாரிகள்! வசமாய் சிக்கிய பெண்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மருத்துவர் மீது தாக்குதல்; காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - காவல் ஆணையர் விளக்கம்
மருத்துவர் மீது தாக்குதல்; காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - காவல் ஆணையர் விளக்கம்
“கத்திக்குத்துப்பட்ட மருத்துவர் பாலாஜி யார், அவர் எப்படி?” வெளியான புதிய தகவல்..!
“கத்திக்குத்துப்பட்ட மருத்துவர் பாலாஜி யார், அவர் எப்படி?” வெளியான புதிய தகவல்..!
"கத்திக்குத்து நடந்த இடத்திற்கே சென்ற துணை முதல்வர்” மருத்துவமனையில் உதயநிதி அதிரடி ஆய்வு..!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!
Exclusive : “அதிமுக, தவெகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
Exclusive : “அதிமுக, தவெகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
Breaking News LIVE 13 Nov : அரசு மருத்துவரை கத்தியால் குத்திய நபரிடம் காவல் ஆணையர் விசாரணை
Breaking News LIVE 13 Nov : அரசு மருத்துவரை கத்தியால் குத்திய நபரிடம் காவல் ஆணையர் விசாரணை
Jharkhand Polls: ஜார்ஜ்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு, 1.37 கோடி வாக்காளர்கள், பிரியங்கா வசமாகுமா வயநாடு?
Jharkhand Polls: ஜார்ஜ்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு, 1.37 கோடி வாக்காளர்கள், பிரியங்கா வசமாகுமா வயநாடு?
KL Rahul : சிஎஸ்கேவில் விளையாட ரெடி.. ராகுல் கொடுத்த மறைமுக ஹிண்ட்
KL Rahul : சிஎஸ்கேவில் விளையாட ரெடி.. ராகுல் கொடுத்த மறைமுக ஹிண்ட்
Embed widget