ஆன்லைன் டிரேடிங் ஆசை காட்டி ரூ.27 லட்சம் மோசடி! ஐடி ஊழியர் அதிர்ச்சி! சைபர் கிரைம் விசாரணை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வாட்ஸ்ஆப்பில் வந்த ஆன்லைன் டிரேடிங் தகவலை நம்பி ரூ. 27 லட்சத்தை செலுத்திய ஐ.டி ஊழியர் ஏமாற்றமடைந்தார்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வாட்ஸ்ஆப்பில் வந்த ஆன்லைன் டிரேடிங் தகவலை நம்பி ரூ. 27 லட்சத்தை செலுத்திய ஐ.டி ஊழியர் ஏமாற்றமடைந்தார்.
ஆன்லைன் டிரேடிங் ; ரூ.27 லட்சம் மோசடி
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு புதிய மொபைல் எண்ணில் இருந்து ஆன்லைன் டிரேடிங் தொடர்பாக செய்தியும், லிங்கும் வந்தது. ஆன்லைன் டிரேடிங் தொடர்பாக பல்வேறு செய்திகளை கேட்டறிந்த ஐ.டி.,ஊழியர் இதை உண்மை என நம்பி லிங்க் மூலமாக முதலில் ரூ.10 ஆயிரத்தை செலுத்தினார். இதன் மூலம் குறிப்பிட்ட தொகை லாபமாக கிடைத்ததால் ஐ.டி.,ஊழியருக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
தொடர்ந்து, மர்ம நபர்கள் பல்வேறு லிங்குகளை அனுப்பி இதில் முதலீடு செய்யுமாறு தெரிவித்தனர். ஊழியர் தனது சொந்த பணத்தையும், நகைகளை அடகு வைத்து அதன் மூல கிடைக்க பணம், நண்பர்களிடமிருந்து கடனாக பெற்றும் 27 லட்சத்து 80 ஆயிரத்து 50 ரூபாயை பல்வேறு வங்கி கணக்கு மூலம் அனுப்பினார்.
10 சதவீதம் கமிஷன் தொகை
இந்நிலையில் ஐ.டி., ஊழியரின் ஆன்லைன் வாலட்டில், ரூ.1.44 கோடி பணம் இருப்பதாக காண்பித்தது. இந்த பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சித்த போது, 10 சதவீதம் கமிஷன் தொகை செலுத்துமாறு மர்ம நபர்கள் தெரிவித்தனர். விசாரித்த போது சைபர் கிரைம் மோசடி கும்பல் என தெரியவந்தது. இது தொடர்பாக ஆன்லைன் மூலமாக புகார் அளித்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வீட்டிலிருந்தே பணிபுரியலாம்; ரூ.41 லட்சத்தை ஆன்லைன் மோசடி
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் மரவள்ளி கிழங்கு இடைதரகர் ஒருவர் சமூகவலைதளத்தில் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்ற விளம்பரத்தை பார்த்து, கிளிக் செய்தார். அப்போது, 9629343051 என்ற எண்ணில் இருந்து அந்த நபருக்கு வாட்ஸ்அப் செயலிக்கு லிங்க் வந்துள்ளது.
அதில், விபரங்களை பதிவு செய்யுமாறும், எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்ற விதிமுறைகளையும் மர்மநபர்கள் தெரிவித்துள்ளனர். இதை சரியாக செய்தால் அதற்குண்டான கமிஷன் தொகை வெப்சைட்டில் உள்ள கணக்கிற்கு வரும், அதை வங்கி கணக்கிற்கு மாற்றி கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
மர்ம நபர்கள் கூறியவாறு செய்த அந்த நபர் ரூ.200 பணம் கிடைத்துள்ளது. இதை நம்பிய பல்வேறு பணிகளை செய்த அவருக்கு கமிஷன் தொகை கிடைக்கப்பெறவில்லை. இது குறித்து கேட்டதற்கு பணம் செலுத்தினால் கமிஷன் தொகை கிடைக்கும் என மர்மநபர்கள் தெரிவித்துள்ளனர்.
உடன் பொன்முடி பல்வேறு தவணைகளாக ரூ.41 லட்சத்து 75 ஆயிரத்து 509 பணத்தை ஆன்லைன் மூலமாக மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். கமிஷன் தொகை கிடைக்காததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து ஆன்லைன் மூலமாக புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





















