மேலும் அறிய
Advertisement
Abp nadu exclusive: குவியல், குவியலாக மதுபாட்டில்கள்: சிவகங்கை அரசு மருத்துவமனையில் போதைப் பொருள் விற்பனையா ?
”மருத்துமனையில் பணியாற்றும் முக்கிய ஊழியர் ஒருவர் விலை உயர்ந்த மதுபாட்டில்களை சப்ளை செய்வதாக தகவல் வெளியாகிறது. அவரை கண்காணித்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி, காளையார்கோயில், திருப்புவனம், பரமக்குடி, மேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நோயிகள் பயன்பெறுவது குறிப்பிடதக்கது. சிவகங்கை மருத்துவ கல்லூரி சமீபகாலமாக வினோத நோய்களுடன் வரும் நோயாளிகளைக் கூட பூரண குணடமடைய செய்து பொதுமக்களின் பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை மருத்துவக் கல்லூரி&மருத்துவமனை வளாகத்தில் காலி மதுபாட்டில்கள் கிடப்பதாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
— Arunchinna (@iamarunchinna) April 19, 2022
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.Further reports to follow - @abpnadu pic.twitter.com/n4u40URsaG
இந்நிலையில் மருத்துமனை வளாகத்தில் விலை உயர்ந்த மது பாட்டில்கள் மற்றும் போதை வஸ்துக்கல் பயன்பாடு அதிகரித்துள்ளாத குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துமனை வளாகத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் விடுதிக்கு அருகே மதுபாட்டில்கள் குவியல், குவியலாக கிடப்பதாக வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்த விசயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், " சிவகங்கை மருத்துவமனை நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் இருந்து மதுபாட்டில்கள் வீசப்பட்டுள்ளது. இது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது. மருத்துவ பணியாளர்களோ அல்லது மருத்துவம் பயிலும் மாணவர்களோ மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசி இருக்கலாம். ஏனெனில் அப்பகுதியில் நோயாலிகள் பாட்டில்கள் வீச வாய்ப்பில்லை. எனவே மருத்துவமனை நிர்வாகம் இதற்கு விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும். சி.சி.டி.வி., காட்சிகள் அடிப்படையிலும் விசாரணை செய்யவேண்டும். மருத்துவமனையில் பணியாற்றும் முக்கிய ஊழியர் ஒருவர் விலை உயர்ந்த மதுபாட்டில்களை சப்ளை செய்வதாக தகவல் வருகிறது. எனவே அவரையும் கண்காணித்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அப்போது தான் மருத்துவத்துறையின் நற்பெயரை காப்பாற்ற முடியும்" என்றனர்.
இது குறித்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதியிடம் பேசினோம்...," ஒரே ஒரு பாட்டில் வளாகத்துக்குள் கிடந்துள்ளது. அதனை யார் போட்டதென்று தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன்" என நம்மிடம் தெரிவித்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - HOTSTAR-இல் ஒளிபரப்பாகும் IPL போட்டியை தனி செயலியை உருவாக்கி ஒளிபரப்பிய சிவகங்கை இளைஞர் கைது
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion