(Source: ECI/ABP News/ABP Majha)
Crime : கை, கால்களை கட்டி 644 கி.மீ தூரம் வரை... உயிருடன் புதைக்கப்பட்ட இந்திய நர்சிங் மாணவி: பதைபதைக்க வைக்கும் கொடூரம்...!
ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் கொடூர கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime : ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் கொடூர கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் தண்டனை
ஆஸ்திரேலியா அடிலெய்டு நகரில் வசித்து வருபவர் ஜாஸ்மீன் கவுர் (21). இவர் அதே பகுதியில் நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில், ஜாஸ்மீன் கவுர், அவரது முன்னாள் காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது முன்னாள் காதலன் அவரை உயிருடன் புதைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தாரிக்ஜோத் சிங் என்பவர் இந்த கொடூர கொலையை செய்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக வழக்கு நடந்த வந்த நிலையில், இந்தாண்டு பிப்ரவரி மாதம் இளைஞர் தாரிக்ஜோத் சிங் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த கொடூர கொலையின் அனைத்து தகவலும் நீதிமன்ற விசாரணையின் போது வெளிச்சத்திற்கு வந்தது.
பகீர் தகவல்
அதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டு தாரிக்ஜோத் சிங்கும், ஜாஸ்மீன் கவுரும் காதலித்து வந்துள்ளனர். இருப்பினம் கருத்து வேறுபாடு காரணமாக தாரிக்ஜோத் சிங்கிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இருந்தாலும், இளைஞர் தாரிக் ஜோத், ஜாஸ்மீனை பேசும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், அவரை பின்தொடர்ந்து டார்சர் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், ஜாஸ்மீன் அவருடன் பேச மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதனால் கோபடைந்த இளைஞர், ஜாஸ்மீனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, அடிலெய்டில் என்ற பகுதியில் பயிற்சி செவிலியராக இருந்த நிலையில், அவரை அங்கிருந்து கடத்தியுள்ளார். காரில் பின்பக்கத்தில் ஜாஸ்மீனை அடைத்து, நான்கு மணி நேரம் காரை ஒட்டிச்சென்றுள்ளார். கிட்டத்தட்ட 644 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார்.
இதனை அடுத்து ஃபிளிண்டர்ஸ் மலைத்தொடரில் கண்கள் கட்டியுள்ளார். உடலை அங்கிருந்து கேபிள் வயர்களை கொண்டு கட்டி அப்படியே கல்லறையில் உயிருடன் புதைத்துள்ளார். விசாரணையின்போது தாரிக்ஜோத் சிங் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தாலும், கொலை குறித்த கொடூரமான விவரங்கள் நேற்று உச்சநீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணை மற்றும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டபோதுதான வெளிச்சத்திற்கு வந்துது.
கொடூர கொலை
விசாரணையின் ஆரம்பத்தில் தாரிக்ஜோத் சிங் கொலை செய்ததை மறுத்து தெரிவித்து வந்தார். ஜாஸ்மீன் கவுர் தற்கொலை செய்து கொண்டதாகவும், உடலை மீட்டு புதைத்தாகவும் கூறி வந்தார். இதனை அடுத்து, இந்த ஆண்டு தொடக்ககத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தாரிக், சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றுளளார்.
அங்கு கவுரின் காலணிகள், கண்ணாடிகள், ஐடி கார்டு ஆகியவற்றை கண்டெடுத்தனர். மேலும், ஜாஸ்மீன் கடத்தப்பட்ட பிறகு, மைல் எண்ட் பகுதியில் உள்ள கடையில் கையுறைகள், பேபிள் வயர்கள், மண்வெட்டி ஆகியவற்றை வாங்குவதை சிசிடிவியில் பதிவாகி இருந்தது.
இதற்கடையில், இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "அந்த பெண்ணை கொடுமைப்படுத்தி அவர் கொன்றுள்ளார். அந்த பெண்ணை இவர் உயிருடன் புதைத்துள்ளார். அந்த பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மண்ணை விழுங்கி மூச்சு திணறி அந்த பெண் உயிரிழந்துள்ளாரர்" என்றார்.