மாணவர்களை அடித்து உதைத்த ஆசிரியர்... தலைமை ஆசிரியர் முன்னிலையில் பெற்றோர்கள் மீதும் பாய்ச்சல்!
மயிலாடுதுறை அருகே அரசு பள்ளி மாணவர்களை அடித்த ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலூக்கா கிளியனூர் அரசு மேனிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்து வருபவர் மகேந்திரன். இவரை அப்பள்ளியில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் வகுப்பறையில் கிண்டல் அடித்து பேசி சிரித்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து சஞ்சய், ஆகாஷ், சுதர்சனன், ஹரிஸ் ஆகிய நான்கு மாணவர்களை தமிழ்ஆசிரியர் மகேந்திரன் ஆசிரியர்கள் அறைக்கு அழைத்து சென்று அடித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம், ஆசிரியர் அவரை கிண்டல் செய்த மாணவர்களை விட்டுவிட்டு தங்களை தவறுதலாக அடித்து விட்டதாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள் கிளியனூர் ஊராட்சிமன்ற தலைவரும், அப்பள்ளியின் கல்விக்குழு தலைவருமான முகம்மது ஹாலீதுவை அழைத்துச்சென்று பள்ளி தலைமை ஆசிரியர் கலிவரதனிடம் புகார் தெரிவித்தனர். அப்போது தலைமை ஆசிரியர் அறைக்கு வந்த தமிழாசிரியர் மகேந்திரன் இது குறித்து கேட்டபோது ஆசிரியர் மகேந்திரன் ஆத்திரத்தில் ஊராட்சிமன்ற தலைவரை பார்த்து எல்லாத்துக்கும் நீதான் காரணம் என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், தலைமையாசிரியர் அறையில் இருந்த பொருட்களை எட்டி உதைத்தும், கண்ணாடிப்பொருட்களை கீழே தள்ளியும் ரகளை செய்துள்ளார்.இதனையடுத்து வாக்குவாதம் முற்றி அங்கு இருந்த பெற்றோர்களுக்கும் ஆசிரியருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இச்சம்பவம் அறிந்த பொதுமக்கள் பள்ளியின் முன்பு திரண்டனர். இந்நிலையில் தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்த மயிலாடுதுறை மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் பெரம்பூர் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இருதரப்பினரும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். கல்வித்துறை அதிகாரிகள் சக ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் தமிழாசிரியர் மகேந்திரன் மீது அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை அறிக்கையை நாகப்பட்டினம் முதன்மைக் கல்வி அலுவலரிடம் தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியில் இருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், இந்த ஆசிரியர் இப்பள்ளியில் தொடர்ந்து பணிபுரிந்தார் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்றும், இவரை பணியிடைநீக்கம் செய்யப்பட வேண்டும் அப்படி இல்லையெனில் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு முன் மாதிரியாக நடந்துகொள்ள வேண்டிய ஆசிரியர் மாணவர்கள் முன்பு மேஜை, நாற்காலிகளை தள்ளி சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய சிறப்புச் செய்திகள் இதோ...
Survivor Tamil: வனமே வனத்திற்கு வந்தது போல்... சர்வைவரில் வந்திறங்கிய வனேசா குரூஸ் யார்?
‛காபி குடித்தால் கொரோனா வராது’ காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் பேச்சு!
அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு எதிர்ப்பு... போராட்டத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள்!
மயிலாடுதுறை : சொந்த செலவில் ஸ்மார்ட் டிவி.. தெருத்தெருவாக சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்






















