மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் : முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் வெட்டி படுகொலை : நடந்தது என்ன?
காஞ்சிபுரத்தை சேர்ந்த திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட நிலையில், ஆறு நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதூர் கிராம பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் சண்முகம் 56 வயது . இவர் திமுக மதூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தின் தலைவராகவும், திமுக சாலவாக்கம் ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராகவும் இருந்துள்ளார். மேலும், இவர் ரியல் எஸ்டேட் மற்றும் சாலை காண்ட்ராக்ட் பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. சாலை காண்ட்ராக்ட் பணி ஒன்றின் போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வாலாஜாபத் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரக்கூடிய சண்முகம், தினமும் தனது சொந்த ஊரான மதூர் கிராமத்திற்கு சென்று விட்டு, இரவில் வாடகை வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதேபோல நேற்று இரவு 9.30 மணி அளவில் சண்முகம் மதூர் கிராமத்தில் இருந்து தனது வீட்டிற்கு செல்லும் பொழுது மதூர் பெட்ரோல் பங்க் அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சண்முகத்தை வழிமறித்து இரும்பு ராடு கொண்டு முகத்தில் தாக்கியுள்ளனர்.மேலும் அந்த இடத்திலேயே வைத்து அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதன்காரணமாக சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சண்முகம் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாலவாக்கம் போலீசார் உயிரிழந்த சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் காவல் கண்ணைப்பாளர் சுதாகர் அவர்கள் நேரில் பார்வையிட்டு கொலை செய்த மர்ம கும்பலை தீவிரமாக தேடும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், முன்விரோதம் காரணமாகத்தான் கொலை நடைபெற்று உள்ளதா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதுடன், இது தொடர்பாக அதிமுக பிரமுகர் உட்பட 6 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர்த்து சண்முகத்தின் உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இப்பகுதியில் புதியதாக கல்குவாரி அமைய உள்ளதாகவும், அதற்காக இவர் உறுதுணையாக இருந்து வருவதால் பொதுமக்கள் இடையே எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் இப்பகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. விவசாயிகளின் அணி துணை அமைப்பாளருமான சண்முகம் அடித்தே கொலை செய்யப்பட்டு இருப்பது, அம்மாவட்டத்தில் உள்ள திமுகவினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. சண்முகத்திற்கு சங்கரி என்ற மனைவியும், தினகரன், தமிழ் என்ற இரு மகன்களும், திவ்யா என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion