மேலும் அறிய
Advertisement
ஸ்பெயின் நாட்டில் கடத்தி வந்த போதை பொருள் சிக்கியது: இருவர் கைது!
ஸ்பெயினில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்
ஸ்பெயின் நாட்டிலிருந்து சரக்கு விமானம் ஒன்று சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த கொரியா் பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது ஸ்பெயினிலிருந்து புதுவை மாநிலம் ஆரோவில் நகரில் உள்ள ஒரு முகவரிக்கு ஒரு பார்சல் வந்திருந்தது. அதனுள் பிறந்தநாள் பரிசுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அலுவலர்களுக்கு சந்தகேம் ஏற்பட்டதால் அப்பார்சலை அவர்கள் திறந்து பார்த்தனர்.
அந்த பார்சலை திறந்து பார்த்து அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது , அந்தப் பார்சலில் 994 போதை மாத்திரைகளும் ( எக்ஸ்டஸி மாத்திரை: ), 249 போதை ஸ்டாம்புகளும் இருந்தன. அதன் சா்வதேச மதிப்பு ரூ.56 லட்சம். இதையடுத்து போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகளை பறிமுதல் செய்தனா். அதோடு அந்த பார்சலில் உள்ள ஆரோவில் நகரில் உள்ள முகவரிக்கு சுங்கத்துறையின் தனிப்படையினர் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
அங்கு அந்த முகவரியில் திருநெல்வேலியை சோ்ந்த ரூபக் மணிகண்டன்(29), லாய் விகூஸ்(28) ஆகிய இருவர் இருந்தனா். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினா். இதையடுத்து அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டனர். அங்கு இரு பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 லட்சம் மதிப்புடைய 5.5 கிலோ கஞ்சா போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில், இருவரும் இயற்கை ஓவிய கலைஞர்கள் என்பது தெரிந்தது.
மேலும், இவர்கள் இதேபோல் வெளிநாடுகளிலிருந்து போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகள் வரவழைத்து கல்லூரி மாணவர்கள், இளைஞா்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. அதேபோல் ஆந்திரா மாநிலம் குண்டூரிலிருந்து கஞ்சா போதைப்பொருளையும் வாங்கிவந்து விற்பனை செய்திருக்கின்றனர்.இருவரையும் சுங்கத்துறையினர் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.58.5 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்
[tw]
சென்னை விமான நிலைய சுங்கத்துறை: ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலிலிருந்து 994 எக்ஸ்டஸி மாத்திரைகள், 249 LSD ஸ்டாம்ப்கள் மற்றும் விசாரணையில் புதுச்சேரியிலிருந்து 5.5 kg கஞ்
சா என மொத்தம் ரூ.58.5 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் NDPS சட்டப்படி கைப்பற்றப்பட்டன. இருவர் கைது. pic.twitter.com/WE8XgO4QBb
— Chennai Customs (@ChennaiCustoms) July 18, 2021
எக்ஸ்டஸி மாத்திரை :-
எக்ஸ்டஸி என்பது ஒரு சட்டவிரோதமான மருந்து ஆகும், இது செயல்பாட்டு மூலப்பொருள் MDMA ( 3,4- மீத்திலென்டைக்ஸ் மெயாம்பேட்டமைமைன் ) கொண்டிருக்கிறது. இது தூண்டுதல்கள் மற்றும் ஹலசினோஜென்களுடன் தொடர்புடையது மற்றும் மனநிலை மற்றும் உணர்வுகள் ஆகியவற்றின் விளைவுகளை உருவாக்குகிறது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion