Crime : பைப்பை சொருகி விளையாடுற இடமா அது..? விபரீத விளையாட்டால் பறிபோன உயிர்..!
குஜராத்தில் விளையாட்டாக ஏர் கம்ப்ரஷர் பைப்பை பின்புறம் சொருகியபோது, 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் அமைந்துள்ள அகமதாபாத்தில் விளையாட்டாய் செய்த செயல் ஒன்று வினையாக முடிந்ததில் சிறுவன் உயிர் பரிதாபமாக பறிபோனது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள காதி தாலுகா அருகே புதியதாக கட்டி வரும் கட்டிடத்தில் தச்சுவேலை நடைபெற்று வந்தது.
இந்த வேலைக்காக தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் சார்பில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் இன்னும் சிலர் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், குல்தீப் விஜய்பாய் மற்றும் 16 வயது சிறுவன் இருவரும் சம்பவத்தன்று அங்கே வேலைபார்த்து வந்தனர்.
இருவரும் வேலை பார்க்கும்போதே கிண்டலும், கேலியுமாக அரட்டை அடித்தபடி வேலை பார்த்து வந்தனர். மதிய உணவுக்கு அவர்களின் ஒப்பந்ததாரர் திரிலோசன் கவுதம் அழைத்தபோது, இருவரும் சிறிது நேரம் கழித்து வருவதாக கூறியுள்ளனர். அப்போது, அங்கே வேலைக்காக கொண்டு வரப்பட்டிருந்த ஏர் கம்பரஷரை பைப்பை எடுத்து ஒருவர் மீது ஒருவர் காற்றை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
பின்னர், ஒருவரது ஆடைக்குள் ஒருவர் அந்த பைப்பில் இருந்து வரும் காற்றை அடித்து விளையாடியுள்ளனர். அப்போது, விளையாட்டுத்தனமாக அந்த 16 வயது சிறுவன் குல்தீப்பின் பின்பக்கமாக அதாவது குல்தீப்பின் மலக்குடல் வழியாக அந்த ஏர்கம்ப்ரஷர் பைப்பை சொருக முயற்சித்துள்ளான். ஆனால், அவனால் முடியவில்லை. உடனே,, குல்தீப் அந்த 16 வயது சிறுவனுக்கும் அதே போன்று அவனது பின்புறத்தில் (மலக்குடலில்) ஏர் கம்ப்ரஷைரை சொருகியுள்ளார்.
அப்போது, ஏர்கம்ப்ரஷரில் இருந்து வெளியேறிய காற்று அந்த 16 வயது சிறுவனின் மலக்குடல் வழியாக அவனது உடலுக்குள் சென்றது. இதனால், சட்டென்று அந்த சிறுவன் மயக்கமடைந்துள்ளான். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குல்தீப் ஒப்பந்ததாரர் திரிசோலன் கவுதமிடம் கூறியுள்ளார். அவர் ஓடிவந்து பார்த்தபோது அந்த சிறுவன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான். அவனை அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தபோது அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, தகவலறிந்த போலீசார் அந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுவனின் மரணத்திற்கு காரணமான குல்தீப் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்