மேலும் அறிய

மது போதை வெறியில் வாலிபரை அடித்துக்கொன்று, விபத்து போல் நாடகமாடிய 4 பேர் கைது

மது போதையில் வாலிபரை அடித்து கொன்றுவிட்டு விபத்து ஏற்பட்டது போல் மருத்துவமனையில் அனுமதித்து நாடகமாடியது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது

நெல்லை பாளையங்கோட்டை அருகே ரெட்டியார்பட்டி காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (27). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த  நிலையில்  நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் டக்கரம்மாள்புரம் -ரெட்டியார்பட்டி சாலையில் சிஎஸ்ஐ சர்ச்க்கு சொந்தமான காலியிடத்தில் ரெட்டியார்பட்டி காமராஜர் தெருவை சேர்ந்த சுப்பிரமணியம்,  தனது நண்பர்களான முருகேசன் கொம்பையா, சரவணன், வெங்கடேஷ் ஆகியோருடன்  மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு அருகே சிவன் நம்பி, செல்வம், செந்தில்முருகன், பொன்பாண்டி ஆகியோர் மது அருந்திக்கொண்டு இருந்துள்ளனர்.

மது போதை வெறியில் வாலிபரை அடித்துக்கொன்று, விபத்து போல் நாடகமாடிய 4 பேர் கைது

அப்போது இதனை பார்த்த சுப்பிரமணியன் சிவ நம்பியிடம் இங்கு எப்படி வந்து நீங்கள் மது குடிக்கலாம் என்று கூறி பாட்டிலால் தாக்கியுதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு சிவன்நம்பி தரப்பினர் சுப்பிரமணியனை பிடித்து தள்ளியுள்ளனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சுப்பிரமணியனை சிவன் நம்பி மற்றும் 3 பேர் சேர்ந்து சரமாரியாக மிதித்துள்ளனர். இதில் மயக்கமடைந்த சுப்பிரமணியன் நீண்ட நேரமாகியும் கண் விழிக்காததால் அதிர்ச்சி அடைந்த சிவன் நம்பி மற்றும் அவரது நண்பர்கள் சுப்ரமணியனை மீட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மது போதையில் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் யாரும் சிகிச்சை அளிக்க மறுத்து விட்டனர்.

மது போதை வெறியில் வாலிபரை அடித்துக்கொன்று, விபத்து போல் நாடகமாடிய 4 பேர் கைது

பின்னர் உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சுப்பிரமணியனை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மருத்துவமனை போலீசார் கேட்டபோது சுப்பிரமணியன் விபத்தில் கீழே விழுந்ததாக முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர், அப்போது மது குடிப்பதில் ஏற்பட்ட மோதலின் போது சுப்பிரமணியனை கொலை செய்தது தெரியவந்ததுள்ளது.  இதைத்தொடர்ந்து பெருமாள்புரம் போலீசார் சிவன் நம்பி உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த கொலை சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
Embed widget