Crime : வாட்சப் மூலம் பரப்பிய படங்கள்.. முன்னாள் காதலன் இழிசெயல்.. பொறியியல் மாணவி தற்கொலை.. பகீர் பின்னணி..
தெலங்கானாவில் பொறியியல் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime : தெலங்கானாவில் பொறியியல் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தான் ராக்கிங் கொடுமையால் தெலங்கானாவில் மருத்துவ மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சூழலில் மீண்டும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் ஒரு பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் சுசித்ரா (22) என்ற மாணவி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு, அதே கல்லூரியில் படித்து வரும் ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டது. நட்பானது காலப் போக்கில் காதலாக மாறியது. இதனால் சுசித்ரா அந்த மாணவருடன் நெருங்கி பழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், இருவருக்கு கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாட்டால் சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் மாணவி சுசித்ரா அவருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்துள்ளார். பல முறை சுசித்ராவிடம் அந்த மாணவி பேச முயன்றும், அவர் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சுசித்ரா அதே கல்லூரியில் படித்து வரும் சீனியர் மாணவருடன் பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. சுசித்ரா சீனியர் மாணவருடன் பேசுவது, முன்னாள் காதலனுக்கு பிடிக்காமல் இருந்துள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் சுசித்ராவை பழிவாங்க முடிவு செய்தார். இதனை அடுத்து, அந்த மாணவன் தன்னுடன் சுசித்ரா நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் மாணவி சுசித்ராவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, கடும் மன உளைச்சலுககு ஆளானார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனது வீட்டில் மாணவி சுசித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோர் அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளான அலோக்யா, ராகுல், யஷ்வந்த் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் படிக்க
Crime: ராகிங் கொடுமை..! தற்கொலை செய்து கொண்ட முதுகலை மருத்துவ மாணவி - நடந்தது என்ன?