Crime: கெத்தாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த கொள்ளையர்கள்; பழனியில் பயமில்லா திருடர்கள்
கொள்ளையர்களை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வந்த போது பத்திரிகையாளர்களுக்கு கெத்தாக போஸ் கொடுத்தனர்.
பழனியில் அரசு மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, 18 பவுன் நகைகள் மீட்க பட்ட நிலையில், கொள்ளையர்களை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வந்த போது பத்திரிகையாளர்களுக்கு கெத்தாக போஸ் கொடுத்த காட்சிகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி இட்டேரி ரோடு தெருவில் வசிப்பவர் அரசு மருத்துவர் கோகுல கண்ணன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டு விசேஷத்திற்காக நாமக்கல் சென்றபோது மர்மநபர்கள் கோகுலகண்ணனின் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த நகைகள் 40 பவுன், ஒரு கிலோ வெள்ளி, ரொக்கம் 6 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவை கொள்ளை அடித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த மாணிக்கராஜ், ஹரிஹரன், பரணிதரன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 18 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் காவல்துறையினர் பழனி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்த போது பத்திரிகையாளர்கள் படம் எடுப்பதை பார்த்த கொள்ளையர்கள், கெத்தாக போஸ் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி அரசு தலைமை மருத்துவர் உதயகுமார் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பழனியில் தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கொள்ளையர்கள் கெத்தாக கேமராவுக்கு போஸ் கொடுத்த சம்பவம் திருடர்களுக்கு கொஞ்சம் கூட அச்சமில்லாத இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. காவல் துறையினர் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)