மேலும் அறிய

Kamarajar Birthday: தலைவன் என்பதற்கான முன் மாதிரி..! கல்வி வளர்ச்சி நாயகர்.. காமராஜரின் 121-வது பிறந்த தினம்..!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121 வது பிறந்தநாளான இன்று, கல்வி வளர்ச்சி நாளாக மாநில அரசால் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121 வது பிறந்தநாளான இன்று, கல்வி வளர்ச்சி நாளாக மாநில அரசால் கொண்டாடப்படுகிறது. 

காமராஜர் எனும் சகாபதம்:

ஒரு தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும், எப்படி சிந்திக்க வேண்டும், யாருக்கான தொலைநோக்கு திட்டங்களை உருவாக்க வேண்டும், எதில் முதலீடு செய்தால் நாளைய தலைமுறை பலன் பெறும் என்பவற்றை ஆராய்ந்து எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதற்கான உதாரணம் தான் காமராஜர்.   வருங்கால சமூகத்திற்கு இன்றியாமையாதது கல்வி என்பதை உணர்ந்து செயல்பட்டதால், தான் இன்றளவும் தமிழக மக்களால் கல்விக் கண் திறந்த காமராஜராகவும், நாட்டையே ஆளும் வாய்ப்பு கிடைத்தும் உதறி தள்ளிவிட்டு, இன்னாருக்கு கொடுங்கள் என அடையாளம் காட்டியதால் கிங் மேக்கராக தேசிய அளவிலும்  அடையாளம் காணப்படுகிறார்.

பிறப்பும், அரசியலும்:

விருதுநகர் மாவட்டத்தில் 1903 ஆம் ஆண்டு குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மையாருக்கு மகனாக பிறந்தார். இவர் அரசியலில் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். சுதந்திர போராட்டங்களிலும் இவர் பங்குபெற்றார். இவர் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றார். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இவரை ஆங்கிலேயே அரசு சிறையில் அடைத்தது. அதன்பின்னர் இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் தவிர்க்க முடியா முக்கிய தலைவராக உருவாகினார். 

முதலமைச்சர் காமராஜர்:

1937 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் விருதுநகர் மாவட்டத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். அதன்பின்னர் 1952ஆம் ஆண்டு விருதுநகரிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகினார். 1954ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார்.

காமராஜரின் கல்வித் தொண்டு:

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இவர் 9 ஆண்டுகள் பதவி வகித்தார். அந்த 9 ஆண்டுகளில் இவர் கல்விக்காக அவர் கொண்டு வந்த திட்டங்கள் அளப்பரியது. தான் படிக்கவில்லை என்றாலும் தன்னுடைய மக்கள் நிச்சயம் கல்வியை கற்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஏழை மாணவர்களுக்கு வசதியாக இருக்கும்படி இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அந்தத் திட்டத்தின் மூலம் பலரும் பயன் அடைந்தனர்.

முன்னோடி திட்டம்:

இந்தத் திட்டங்கள் அனைத்தும் இந்தியாவிற்கே முன்னோடியாக அமைந்தன. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு இந்தத் திட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்தது. தமிழ்நாட்டின் இந்த திட்டத்தை பல்வேறு மாநிலங்களும் தொடர்ந்து புகழ்ந்து வந்தன. காமராஜரின் இந்தத் திட்டம் அத்தகைய தொலை நோக்கு பார்வையுடன் அமைந்திருந்தது. கொரோனா பேரிடர் காலங்களிலும் இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் நமக்கு நன்றாக தெரியவந்தது. பள்ளிகள் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்தாலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தலைவரின் 120 வது பிறந்தநாளில் அவருடைய கொள்கையை முன்னெடுக்க நாம் உறுதி மொழி எடுப்போம்.

கிடைக்காத காமராஜர் ஆட்சி:

இன்றளவும் பல கட்சிகள் தாங்கள் வெற்றி பெற்றால் காமராஜர் ஆட்சியை தருவோம் என்ற வாக்குறுதியே , காமராஜர் என்ற மனிதன் எத்தகைய எளிமையான வாழ்வியலோடு, மக்களுக்கான எப்படிப்பட்ட ஆட்சியை வழங்கினார் என்பதற்கான சான்றாகும். 

கிங் மேக்கர் காமராஜர்:

1964 ம் ஆண்டு, அப்போதைய பாரதப் பிரதமர் நேரு,  இயற்கை எய்தினார். இதன் காரணமாக அப்போதைய காங்கிரசின் தலைவரகாக இருந்த காமராஜர் தான், நாட்டின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்க உளார் என அனைத்து தரப்பினராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அனைத்து எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கும் விதமாக, லால் பகதூர் சாஸ்திரியை பிரதமர் நாற்காலியில் அமர்த்தினார் படிக்காத மேதையான அந்த கருப்பு வைரம்.   

அடுத்த இரண்டே ஆண்டுகளில் மீண்டும் அதே சூழ்நிலை. பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சிண்டிகேட் குழுவோ,  'தேசாய் பிரதமராகக் கூடாது' என்ற முடிவுடன் மீண்டும் காமராஜரை முன்னிலைப்படுத்தியது. ஆனால் ”காங்கிரசின் பலம் சமீப காலமாகக் குறைந்து வருவதால்,  தேசிய அளவில் காங்கிரசை ஒருங்கிணைக்க வேண்டும். ஆங்கிலம், இந்தி இரண்டும் சரியாகத் தெரியாத நான் அந்தப் பதவியில் அமருவது சாத்தியமில்லை” என்று  மறுத்ததோடு, நேருவின் மகள் இந்திராவைப் பிரதமராக்கினார். வார்ட் உறுப்பினர் பதவிக்கே வெட்டு, குத்து வரை செல்லும் சூழலில், காங்கிரஸ் கட்சிட்யை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக தனது முதலமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தவர் தான் காமராஜர். அத்தகைய உன்னத தலைவரின் பிறந்த நாளான ஜுலை 15ம் தேதியை, கடந்த 2006-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார். அப்போது முதல் இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?
இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AR Rahman on Divorce : ”இப்படி பண்ணிட்டியே சாய்ரா..சுக்குநூறா உடைஞ்சுட்டேன்” மனம் திறந்த AR.ரஹமான்AR Rahman Saira Divorce Reason : ”வலியும், வேதனையும் அதிகம்”ஏ.ஆர் - சாய்ரா பகீர்!BJP Controversy Video |’’நாங்க ஆட்சிக்கு வரலனா..உங்கள சூறையாடிருவாங்க!’’பாஜக மதவெறி வீடியோGym Master Death | காதில் ரத்தம்..பாத்ரூமில் சடலம்..ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?
இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?
நடுவானில் வந்த மாரடைப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வந்த பெண் மரணம் - சோகத்தில் கள்ளக்குறிச்சி
நடுவானில் வந்த மாரடைப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வந்த பெண் மரணம் - சோகத்தில் கள்ளக்குறிச்சி
AR Rahman Divorce: டைவர்ஸ்க்குனு தனி APP! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கித் தந்த வழக்கறிஞர் யாரு தெரியுமா?
AR Rahman Divorce: டைவர்ஸ்க்குனு தனி APP! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கித் தந்த வழக்கறிஞர் யாரு தெரியுமா?
School Leave:  பசங்களா! தமிழ்நாட்டில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
School Leave: பசங்களா! தமிழ்நாட்டில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
Embed widget