15 வயது சிறுமி பாலியல் வழக்கு; வாலிபருக்கு 40 ஆண்டுகள், பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த போக்சோ வழக்கில் கைதானவர்களுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்தவர் வினோத் (32). கொத்தனார். திண்டுக்கல் சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கவிதா (37). கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு, 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்று வினோத் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவருக்கு கவிதா உடந்தையாக இருந்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் 2 பேர் மீதும் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
Ponniyin Selvan Twitter Review: எல்லாமே பிரமாண்டம்.. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா? பொன்னியின் செல்வன் ட்விட்டர் விமர்சனம் இதோ!
பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட வினோத்துக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்த கவிதாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். இதையடுத்து 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
IND vs SA T20 : டி20 அப்டேட் இதோ இங்கே.. பும்ராவிற்கு பதில் களமிறங்கப் போவது யார் தெரியுமா?
இதேபோல் பழனியை அடுத்த சண்முகநதி பகுதியை சேர்ந்தவர் சுல்தான் மைதீன் (35). இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு இவர், தனது கடைக்கு வந்த 22 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை திருமண ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சுல்தான் மைதீனை கைது செய்தனர். மேலும் அவர் மீது திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுல்தான் மைதீனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார்.