மேலும் அறிய
Advertisement
Dharmapuri: தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு - பென்னாகரம் அருகே சோகம்
நெக்குந்தி அடுத்த கல் மாரியம்மன் கோவில் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு - பென்னாகரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பொம்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன்-மனைவி கன்னியம்மாள் தம்பதியினருக்கு இரண்டு மகள், இரண்டு வயதில் சக்திதரன் எனும் ஆண் குழந்தை உள்ளது. இலட்சுமணன் ஆண்டுதோறும் தர்பூசணி பழ சீசனில் வெளியூர் சென்று வியாபாரம் செய்து வருகிறார். இந்த ஆண்டும் தர்பூசணி பழம் வியாபாரத்திற்காக வெளியூர் சென்றுள்ளார். அப்பொழுது தனது குழந்தைகளை கடந்த 3ம் தேதி மாலை நெக்குந்தி அடுத்த கல் மாரியம்மன் கோவில் அருகே உள்ள கன்னியம்மாளின் அக்கா வீட்டில் சக்திதரனை விட்டுவிட்டு வெளியூர் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டு அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் தவறி விழுந்துள்ளார். இதில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் சக்தி கரன் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து வெளியூரில் உள்ள கன்னியம்மாளுக்கு போன் செய்த அவரது உறவினர் ஆண் குழந்தை சக்திதரன் தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டதாகவும், சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்ததாகவும், ஆண் குழந்தை சக்திதரன் உடல் பிரேத கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்ட கண்ணியம்மாள் மற்றும் அவரது கணவர் உடனடியாக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்து இறந்த ஆண் குழந்தை சக்திதரன் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து கண்ணியம்மாள் அவரது அக்காவிடம் கேட்டபோது தான் மாடு கட்ட சென்று விட்டு வந்து பார்த்தபோது, வீட்டில் சக்திதரனை காணவில்லை எனவும், வெளியில் தேடிப் பார்த்த போது தண்ணீர் தொட்டியில் குழந்தை சக்திதரன் விழுந்து கிடந்தான், உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்ததாகவும் , அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என தெரிவித்தனர் என கூறியுள்ளார்.
இதுகுறித்து கண்ணியம்மாள் பென்னாகரம் காவல் நிலையத்தில் தனது ஆண் குழந்தை சக்திதரன் இறப்பு குறித்து நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பென்னாகரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பென்னாகரம் பகுதியில் இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion