கோகுல் ராஜ் வழக்கில் யாரெல்லாம் விடுதலை..? - குற்றவாளிகள் யார் யார்..? முழு விவரம் உள்ளே..!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 10 பேர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பொறியியல் பட்டதாரி கொகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. 5 பேர் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தண்டனை விவரங்கள் வரும் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் இருவர் உயிரிழந்த நிலையில் 15 பேர் மீது விசாரணை நடைபெற்று வந்தது. அதில், 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 10 பேர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 8ஆம் தேதி வழங்கப்படுகிறது. குற்றவாளிகள் மற்றும் விடுதலை செய்யப்பட்டவர்கள் முழு விவரங்கள் வெளியாகியுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெயர்கள்:
A1 : யுவராஜ்
A2 : அருண் - யுவராஜின் கார் ஓட்டுநர்
A3 : குமார் (எ) சிவக்குமார்
A4 : சங்கர்
A5 : அருள் வசந்தம்
A6 : செல்வக்குமார்
A7 : தங்கதுரை (யுவராஜ் சகோதரர்)
A8 : சதீஸ்குமார்
A9 : ரகு (எ) ஸ்ரீதர்
A10 : ரஞ்சித்
A11 : செல்வராஜ்
A12 : சந்திர சேகர்
A13 : பிரபு
A14) : கிரிதர்
A15 : சுரேஷ்
இதில், சங்கர், அருள்செந்தில், செல்வகுமார் , தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 10 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்