சிவகங்கை: போலி ஆவணங்கள்.! புரோக்கர்களாக மாறிய வட்டாட்சியர், வி.ஏ.ஓ! கைமாறிய 200 ஏக்கர்!?
போலி ஆவணம் மூலம் 200க்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை தனிநபருக்கு மாற்றியதாக மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணி இடைநீக்கம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவுக்கு உட்பட்ட தெ.புதுக்கோட்டை வருவாய் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மானாமதுரை மண்டல துணை தாசில்தார் உதவியுடன் தனிநபர் இடம் மற்றும் அரசு நீர்பிடிப்பு நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் தனிநபருக்கு புரோக்கர்களாக செயல்பட்டு விற்பனை செய்தாக சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. இந்த புகாரை உயரதிகாரிகள் மூலம் அறிந்த மண்டல துணை தாசில்தார் மறுபடியும் அரசு மற்றும் தனியார் நிலங்களை பழைய நிலைக்கு ஆவணங்களை மாற்றியுள்ளார்.

#sivagangai | மானாமதுரை தெ.புதுக்கோட்டை பகுதியில் போலி ஆவணம் மூலம் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை தனிநபருக்கு மாற்றியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |@svgsocialmedia | @SRajaJourno . pic.twitter.com/gTp2ZaxfYD
— Arunchinna (@iamarunchinna) May 20, 2022






















