Crime : வாங்கிய கடனை திருப்பி தராத ஆத்திரம்! 14 வயது சிறுவன் சுட்டுக் கொலை! கொலையாளிகள் சிக்கியது எப்படி?
கடனாக வாங்கி பணத்தை திருப்பி தராத ஆத்திரத்தில் 14 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime : கடனாக வாங்கி பணத்தை திருப்பி தராத ஆத்திரத்தில் 14 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஷஹபாத் டெய்ரி என்ற பகுதியில் உள்ள கால்வாயில் 14 வயது சிறுவனின் சடலத்தை கடந்த 23ஆம் தேதி போலீசார் மீட்டனர். பின்பு இது குறித்து போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
அப்போது கடந்த சில நாட்களுக்கு முன் தனது மகன் காணவில்லை என்று புகார் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. பின்பு, புகார் அளிக்கப்பட்டவர்களை வரவழைத்து, உடலை அடையாளம் கண்டு, இறந்தவர் அவர்களது மகன் என்பதை உறுதி செய்தனர். மேலும் 14 வயது சிறுவன் மஞ்சீத் என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து 14 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில் ஹர்ஷித், விக்ரம், விபின் மற்றும் பங்கஜ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து போலீசார் கூறுகையில், ” ஷஹபாத் டெய்ரி என்ற பகுதியில் கைது செய்ப்பட்ட நான்கு பேரும் துணிக்கடை நடத்தி வருகின்றனர். 14 வயது சிறுவனான மஞ்சீத் என்ற சிறுவன் அங்கு வேலை செய்து வந்துள்ளார். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் இருந்து 18 ஆயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். இதனை சில நாட்களுக்கு கழித்து திருப்பி தருவதாக கூறி பணத்தை வாங்கி உள்ளார்.
ஆனால் அந்த சிறுவன் கூறிய தேதியில் பணத்தை திருப்பி தராமல் இருந்துள்ளார். இதனால் அவர்கள் நால்வரும் பல முறை பணத்தை திருப்பி தரும்படி கூறியுள்ளார். அந்த சிறுவன் பல காரணங்களை கூறி பணத்தை தர மறுத்து வந்து கொண்டிருந்தார். பின்பு, சம்பவத்தன்று மஞ்சீத்தை கடைக்கு வரவழைத்து, பணத்தை தரும்படி கூறியுள்ளனர். மஞ்சீத் பணத்தை தர மறுத்தால், அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில், கைகலப்பு ஏற்பட்டது.
பின்பு அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மஞ்சீத்தை சுட்டுக் கொலை செய்துள்ளனர். பின்பு, அவரது உடலை ஒரு சாக்கு பையில் கட்டிக் கொண்டு ஷஹபாத் டெய்ரி பகுதியில் உள்ள கால்வாயில் வீசி சென்றுள்ளனர். உடலை பார்த்து அக்கம் பக்கத்தினரால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது” என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர். பின்பு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Suicide : எனக்கு வாழ ஆசைதான்.. ஆனால் என் கணவர்: அதிரவைத்த பெண்ணின் தற்கொலை குறிப்பு