Suicide : எனக்கு வாழ ஆசைதான்.. ஆனால் என் கணவர்: அதிரவைத்த பெண்ணின் தற்கொலை குறிப்பு
எனக்கு வாழ ஆசைதான் ஆனால் என் கணவர் என்னை நித்தமும் கொடுமைப் படுத்துகிறார் என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் அந்த தற்கொலைக் குறிப்பை தனது கைகளிலேயே எழுதி வைத்துள்ளார்.
எனக்கு வாழ ஆசைதான் ஆனால் என் கணவர் என்னை நித்தமும் கொடுமைப் படுத்துகிறார் என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் அந்த தற்கொலைக் குறிப்பை தனது கைகளிலேயே எழுதி வைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் நகர் தான் இப்பெண் வசித்துவந்த ஊர். சூரத்தின் லிங்காயத் பகுதியில் வாழ்ந்து வந்தார். இவருடைய கணவர் பிரவீன் கோஸ்வாமி. இவர் ரிக்ஷா ஓட்டுகிறார். இவர்களுக்கு இடையே நிறைய பிரச்சனை வந்துள்ளது. இந்நிலையில் தான் இப்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை குறிப்பை தனது கைகளிலேயே எழுதி வைத்துள்ளார். சூரத் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். திருமணமான 8 ஆண்டுகளில் இந்தப் பெண் இந்த சோகமான முடிவைத் தேடியுள்ளார்.
தற்கொலை எதற்குமே தீர்வாகாது. தற்கொலை எண்ணம் தோன்றினால் நம் நெருங்கியவர்களிடம் மனம் விட்டுப் பேசினாலே தீர்வு கிட்டும். இல்லாவிட்டால் இப்போதெல்லாம் நிறைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கட்டணமில்லா தொலைபேசி சேவை மூலமே தற்கொலை தடுப்பு சேவை செய்கின்றன. அவற்றை அணுகலாம்.
`பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மூன்றில் ஒன்று நெருக்கமானவர்களாலேயே நடக்கிறது; 31.8% குற்றங்கள் பெண்ணின் கணவரால் அல்லது உறவினர்களால் நடக்கின்றன’ என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் அஸ்ஸாம் முதலிடம் வகிக்கிறது. 2021-ம் ஆண்டு மட்டும் அஸ்ஸாமில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் 29,046 பதிவாகியுள்ளன. நாட்டின் தலைநகரான டெல்லி இப்பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் ஒடிசா, ஹரியானா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், 31.8% குற்றங்கள் பெண்ணின் கணவரால் அல்லது அவர்களின் உறவினர்களால் நடக்கின்றன. 20.8% குற்றங்கள் சமூகத்தில் ஒரு தனிப்பட்ட பெண்ணின் மாண்பை சீர்குலைக்கும் நோக்கத்திலேயே நடைபெறுவதாகக் கூறுகிறது தேசிய குற்ற ஆவண காப்பகம்
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த விஸ்மயா வழக்கை விசாரித்த பெண் காவல் உயர் அதிகாரி. எப்போது நீங்கள் உங்கள் மீது நடைபெறும் முதல் வன்முறையை பொறுத்து அனுமதிக்கிறீர்களோ அப்போதே நீங்கள் அதை வரவேற்கிறீர்கள் என்று அர்த்தம் என்று அறிவுரை கூறியிருந்தார். குடும்ப வன்முறைகளை ஊக்குவிக்காதீர்கள் பெண்களே. உயிர் உன்னதமானது.