Shocking Video: காதலை முறித்ததால் ஆத்திரம்.. இளம்பெண்ணை கத்தியால் பலமுறை குத்தி கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ!
21 வயது பெண் ஒருவர் அவரது காதலனால் பலமுறையால் கத்தியால் குத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், கடந்த திங்கள்கிழமை காலை மற்றொரு கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
21 வயது பெண் ஒருவர் அவரது காதலனால் பலமுறையால் கத்தியால் குத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண், தாக்கிய நபருடனான காதலை முறித்து கொண்டதால் கோபமழைந்த அந்த நபர், பட்டப்பகலில் அந்த பெண்ணை கத்தியால் குறைந்தது 5 முதல் 6 முறை வரை கொடூரமாக குத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் பல ஆண்டுகளாக அந்த நபருடன் காதல் கொண்டிருந்ததாகவும், இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தன் காதலை முறிக்க முடிவெடுத்துள்ளார். இதனால், அந்த நபருடனான பேச்சுவார்த்தையையும் நிறுத்தியுள்ளார். இதையடுத்து, ஆத்திரமடைந்த அந்த நபர் தன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து பட்டப்பகலில் யாரும் இல்லாத சந்து ஒன்றில் கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.
#WATCH | A 22-year-old youth namely Sukhvinder arrested for stabbing a girl in Adarsh Nagar area on Jan 2. Both were friends &due to some dispute, he stabbed her 3-4 times.The girl is admitted to a hospital&her condition is stable: Delhi Police
— ANI (@ANI) January 4, 2023
(CCTV visuals confirmed by police) pic.twitter.com/VLMvdmWGuH
தொடர்ந்து, அந்த பெண்ணை கொடூரமாக தாக்கிவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தநிலையில், அம்பாள் என்ற பகுதியில் கைது செய்தனர்.
போலீசார் அளித்த முதற்கட்ட தகவலின்படி, பாதிக்கப்பட்ட பெண் 21 வயதான சிம்ரஜித் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் திறந்த கற்றல் பி.ஏ படித்து வருவதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர், 22 வயதான சுக்விந்தர் சிங் என்றும், இவரும் அந்த பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
பிரிவு ஏன்?
இருவரும் காதலித்த விவகாரம் பெண்ணின் வீட்டுக்கு தெரியவர, பூதாகாரமாக வெடித்துள்ளது. இதன் காரணமாக அந்த பெண் அந்த சுக்விந்தரை ஒதுக்கி வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுக்விந்தர் பிரிந்ததற்கான காரணத்தை அறிய விரும்பியதால், தன்னை வந்து சந்திக்கும்படி கூறியுள்ளார். அப்போது எதிர்பாராத நேரத்தில் அந்த பெண்ணை சுக்விந்தர் கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பக்கத்து வீட்டுக்காரர் ஓடி வந்து அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை என்ன?
டெல்லி ஜஹாங்கிர்புரியில் உள்ள பாபு ஜக்ஜீவன் ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்ட மாணவியின் உடல்நிலை தற்பொது சீராக இருப்பதாக டெல்லி காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.