வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை - வில்லன் நடிகரின் மனைவி கைது
மருமகளின் தற்கொலைக்கு காரணமாக இருந்த நடிகர் ராஜன் பி தேவின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் ராஜன் பி.தேவ். தமிழில் இவர் சூரியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.
ராஜனுக்கு சாந்தம்மா என்ற மனைவியும், உன்னி என்ற மகனும் உள்ளனர். உன்னி ஒரு சில மலையாள படங்களில் நடித்திருக்கிறார். உன்னிக்கு, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் ஒரு சில வருடங்களுக்கு முன் நடைபெற்றது. திருமணத்தின்போது 100 பவுன் நகை மற்றும் பொருட்கள் வரதட்சணையாக உன்னி குடும்பத்தாரிடம் பிரியங்காவின் குடும்பத்தார் கொடுத்தனர்.
ஆனால் வரதட்சணை போதாது என்றும் மேற்கொண்டு வரதட்சணை வேண்டுமெனவும் சாந்தம்மாவும், உன்னியும் பிரியங்காவை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் கொடுமைகளை பொறுக்க முடியாத பிரியங்கா தனது தாய், தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். மேலும் சில மாதங்களுக்கு முன்னர் அவர் தற்கொலையும் செய்துகொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன் தன்னுடைய சாவுக்கு சாந்தம்மாவும், உன்னியும்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் உன்னியை கைது செய்தனர்.
சாந்தம்மாவின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், விசாரணை அதிகாரியான நெடுமங்காடு டிஎஸ்பி முன் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டது. அதன்படி நேற்று கையெழுத்திட வந்த சாந்தம்மாவை காவல் துறையினர் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Ameer ParuthiVeeran | பருத்திவீரனில் பட்ட சிரமம்... மிரட்டினாரா இளையராஜா... அமீர் பேசிய விறுவிறு விஷயங்கள்..
யோவ்! கடனை கட்டிட்டு செத்துப்போயா ! விவசாயியை மிரட்டிய பெண் ஊழியர்..வைரலாகும் ஆடியோ பதிவு!