மேலும் அறிய

Crime: ஹோட்டல் அறையில் இளம்பெண் சடலம்! காதலியை சுட்டுக் கொன்ற காதலன் - பகீர் பின்னணி!

மகராஷ்டிராவில் காதலித்த பெண்ணை இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட பெண்:

இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, வட மாநிலங்களில் நாளுக்கு நாள் நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.  இந்த நிலையில், புனேவில் இளம்பெண் ஒருவர்  சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் செயல்பட்டு வரும் ஐடி கம்பெணி ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் வந்தனா திவேதி (26).  இவர் இன்று அதிகாலை  ஹிஞ்சேவாடி பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்துள்ளார். இவரது உடலை பார்த்த ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, மும்பை பகுதியில் சந்தேகத்திற்குரிய ஒரு நபரை போலீசார் கைது செய்தனர். அப்போது, ரிஷப் நிகாம் என்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சில தகவல்கள் வெளியாகின.

காரணம் என்ன?

அதில், பெண் வந்தனா திவேதியும், இளைஞர் ரிஷப் நிகாம் என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.  சம்பவத்தன்று இவர்கள் இருவரும் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது, இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் நீடித்ததை அடுத்து, இளைஞர் ரிஷப் நிகாம், இளம்பெண் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருக்கிறார். பின்னர், அங்கிருந்து மும்பைக்கு தப்பி சென்றுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும், இவர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.  ஹோட்டல் அறையில் காதலித்த பெண்ணை, இளைஞர் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

Crime: ஊர், ஊராக சென்று பாலியல் தொழில்.. போதையில் சிக்கிய தம்பதியினர்.. பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்!

மாயமான இளம் ஆசிரியை! உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு - பாலியல் வன்கொடுமை செய்து கொலையா?

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget