Crime: துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்.. பல்லை உடைத்த கொடூரம்.. சந்தேகத்தால் கணவன் வெறிச்செயல்!
உத்தர பிரதேசத்தில் 35 வயதுடைய பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.
Crime: உத்தர பிரதேசத்தில் 35 வயதுடைய பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கூட, மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, சிறுமி ரத்தப்போக்குடன் தெருவில் உதவி கோரிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
சந்தேகம் அடைந்த மனைவி:
உத்தர பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இவருக்கு சூரஜ் பிரக்காஷ், பிரிஜேஷ் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, ராம்குமார் முதல் மனைவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, மாயா தேவி (35) என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். பின்னர், இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். திருமணம் நடந்து சிறிது நாட்களிலேயே இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது. மேலும், ராம்குமார், தனது இரண்டாவது மனைவி மாயா தேவியை சந்தேகித்தார். தனது மகன்களுடன் உறவில் இருப்பதாக ராம்குமார் சந்தேகித்ததாக கூறப்படுகிறது. இதனால், மாயா தேவியை கொலை செய்ய குடும்பத்துடன் திட்டம் தீட்டினர்.
கொடூரமாக கொலை செய்த கணவர்:
அதன்படி, பண்டா மாவட்டத்திற்கு மாயா தேவியை காரில், மூன்றும் பேரும் அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போது, அங்கு மாயா தேவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, கோடாரியால் அவரின் தலை மற்றும் நான்கு விரல்களை வெட்டியுள்ளனர். மேலும், பெண்ணின் அடையாளத்தை மறைக்க பற்களை உடைத்திருப்பதோடு, பெண்ணின் தலை முடியையும் வெட்டி உள்ளனர்.
பின்னர், அங்கிருந்த அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை அழுகிய நிலையில், ஒரு சடலம் கிடந்தது பற்றி அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தலை பகுதி மற்றும் நான்கு விரல்களையும் கண்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் கோடாரி ஆகியவை போலீசார் மீட்டுள்ளனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்தனர். அதில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததாக தெரிகிறது.
மேலும் படிக்க
Crime: பணம் கொடுக்க மாட்டியா? பெண்ணை அடித்தே கொன்ற கொடூரம்: 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!