மேலும் அறிய

டிஎஸ்பி ஆபீஸ் பக்கத்துலேயே மூதாட்டி சரமாரியாக வெட்டிக்கொலை; திருப்பத்தூரை உலுக்கிய சம்பவம்

திருப்பத்தூரில் மூதாட்டியை மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

திருப்பத்தூர் டிஎஸ்பி அலுவலகம் அருகே  மூதாட்டியை சரமாரியாக வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துர்நாற்றம் வீசிய நிலையில் சடலத்தை மீட்ட போலீசார் வேலூரிலிருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கோணாப்பட்டு பகுதியை சேர்ந்த லக்ஷ்மணன் மனைவி சந்திரா (68). கணவனை இழந்த இவர் மாவட்ட துணை கண்காணிப்பு அலுவலகம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே கடந்த 20 ஆண்டு காலமாக பழக்கடை வைத்து பழவியபாரம் செய்து  வந்துள்ளார். மேலும், பழவியாபாரம் முடித்துவிட்டு மாலை நேரம் கோணப்பட்டு மற்றும் கருப்பனூர் பகுதியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். 

 

இந்த நிலையில், நேற்று பழவியாபாரம் முடித்துவிட்டு மாவட்ட துணை கண்காணிப்பு அலுவலகம் அருகே உள்ள சத்துணவு முட்டை குடோனில் பழங்களை வைத்துவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கமாக இருந்து வந்த நிலையில், நேற்று பழங்களை வைக்க சத்துணவு முட்டை குடோனிற்கு சென்றுள்ளார். அப்போது நேற்று மாலை நேரம் திடீரென கனமழை பெய்ததால் சத்துணவு முட்டை குடோனில் மூதாட்டி சந்திரா இருந்துள்ளார். 

அப்போது அங்கு திடீரென வந்த மர்மநபர்கள் மூதாட்டியை சரமாரியாக வெட்டி தாக்கியதில் படுகாயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் இருந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், பழவியாபாரம் முடித்துவிட்டு மூதாட்டி  கோணப்பட்டு பகுதிக்கு சென்றிருப்பார் என மகள் நினைத்திருந்துள்ளார். உறவினர்கள் கருப்பனூர் பகுதியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருப்பார் என நினைத்து கொண்டு இருந்துள்ளார்.

இந்த நிலையில் அப்பகுதியில் துர்நாற்றம் வீசிய நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இது தொடர்பாக திருப்பத்தூர் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த நகர போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மூதாட்டியை சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக மூதாட்டியை மர்மநபர்கள் கொலை செய்தனர் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். 

20 ஆண்டு காலமாக கணவனை இழந்து மூதாட்டி பழவியாபாரம் செய்து பிழப்பு நடத்தி வந்த நிலையில் மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து, வேலூரிலிருந்து சாரா என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் சாலையிலிருந்து அவ்வழியாக சென்று புதுப்பேட்டைரோடு வழியாக சென்ற மோப்பநாய் சாரா இறுதியில் அண்ணா நகர் பகுதியில் நின்றது. அதனை தொடர்ந்து வேலூர் சரக டிஐஜி மகேஷ் மூதாட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு கொண்டார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
Embed widget