Crime: பணம் கொடுக்க மாட்டியா? பெண்ணை அடித்தே கொன்ற கொடூரம்: 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!
பீகார் மாநிலத்தில் கடன் தவணைத் தொகையை செலுத்த தவறியதால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: பீகார் மாநிலத்தில் கடன் தவணைத் தொகையை செலுத்த தவறியதால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக வடமாநிலங்களில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பீகாரில் கொடூரம்:
பீகார் மாநிலம் பால்கா பகுதியைச் சேர்ந்தவர் பெண்ணுக்கு இரண்டு மகள்கள் உள்ளது. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடன் கடனமாக பணம் பெற்றுள்ளார். மாதம் மாதம் தவணைத் தொகையை சரியாக செலுத்தி வந்துள்ள நிலையில், ஒரு மாதம் மட்டும் தவணைத் தொகையை செலுத்த தவறவிட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த 18ஆம் தேதி அந்த பெண்ணிடம் கடன் கொடுத்தவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போதும், கடுமையான வார்த்தைகளால் பேசி, தாக்கி உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்றும், தவணைத்தொகையை செலுத்த தவறியாதல் மீண்டும் அவரது வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பெண்ணை கொடூரமாக தாக்கியதோடு, பெண்ணின் மகளையும் கடுமையாக அடித்துள்ளதாக தெரிகிறது.
இந்த தாக்குதில் பெண்ணுக்கும், அவரது மகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களை தாக்கிவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், அந்த சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேடி வந்தனர். பின்னர், நேற்று இரவு 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பீகார் மாநிலத்தில் 1,500 ரூபாய் கடன்பெற்ற பெண் ஒருவர், அதற்கான கூடுதல் வட்டியை செலுத்துவதற்கு மறுத்ததால் அவரை நிர்வாணமாக்கி அவரது வாயில் கடன் கொடுத்தவர்கள் சிறுநீர் கழித்துள்ளனர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் படிக்க
Crime: வீட்டு வேலைக்கு சென்ற இடத்தில் சைக்கோ தம்பதியிடம் சிக்கிய சிறுமி: 6 மாதம் தொடர் சித்ரவதை!