மேலும் அறிய

கள்ளக் காதல் விவகாரம் ; நள்ளிரவில் மனைவியுடன் உல்லாசமாக இருந்த டிரைவர் அடித்துக் கொலை !!

கன்னிவாடி அருகே கள்ளக் காதல் தகராறில், டிரைவர் ஒருவர் நில அளவை கல்லால் (சர்வே கல்) அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவன், மகன்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்

அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ரெட்டியார்பட்டி சுடுகாட்டில் கன்னி வாடியை சேர்ந்த குருசாமி என்பவரது மகன்‌ 48 வயதுடைய பாலசுப்ரமணி கடந்த (மே 22) ஆம் தேதி வியாழக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யபட்டார்.இதுகுறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பிரதீப், டி.எஸ்.பி கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், கன்னிவாடி சார்பு ஆய்வாளர் சிவராமன் ஆகியோர் விசாரணை செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் கன்னிவாடி ரெட்டியார் பட்டியைச் காலனியை சேர்ந்த காசிராஜா (வயது 42). அவரது மகன்கள் சஞ்சய் (வயது 20) மனோஜ் குமார் (வயது 21) வாடிப்பட்டி தாலுகா கச்சிராயிருப்பு பகுதியை சேர்ந்த ஜானகிராமன் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். 

திருமணத்தை மீறிய உறவு

விசாரணையில் , காசிராஜாவின் மனைவி மருதாயம்மாளுக்கும் கொலையான பாலசுப்பிரமணியத்திற்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரிய வந்தது. சம்பவத்தன்று காசிராஜன் தனது வீட்டில் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் தண்ணீர் குடிக்க எழுந்து பார்த்த போது தனது மனைவி மருதாயம்மாள் வீட்டில் இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

எனவே உடனடியாக தனது மகன்களுடன் காசிராஜன் தனது மனைவியை தேடி சென்ற போது வீட்டின் வெளியே மருதாயம்மாள் இல்லாததை அடுத்து பாலசுப்பிரமணியம் வீட்டில் பாலசுப்பிரமணியம் , மருதாயம்மாள் ஆகிய இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனைப் பார்த்து கணவன் மற்றும் மகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கல்லால் தாக்கி கொலை

உடனடியாக தனது உறவினரான வாடிப்பட்டி கச்சராயிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜானகிராமனுக்கு ( வயது 25) தகவல் தெரிவிக்கவே ஜானகிராமன் பாலசுப்பிரமணியத்தை தீர்த்து கட்டச் சொல்லி சம்பவ இடத்திற்கு நேரில் வந்துள்ளார்.இதனையடுத்து நால்வரும் பாலசுப்பிரமணியத்தை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் தகராறு முற்றவே ஜானகிராமன் கையில் இருந்த இரும்பு கம்பியை கொண்டு பாலசுப்பிரமணியத்தை தாக்கியுள்ளார். பாலசுப்ரமணியம் பதிலுக்கு அவர்களை தாக்கியதில் கடும் கோபமடைந்த நால்வரும் பாலசுப்ரமணியத்தை அருகில் இருந்த நில அளவை கல்லை (சர்வே கல்) எடுத்து அடித்து கொலை செய்து விட்டு அந்த கல்லை கிணற்றுக்குள் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டது தெரிய வந்துள்ளது.

அதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக் காதல் தகராறில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது

Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அளவில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு 2-ம் இடம்: ஆணையர் பெருமிதம் 
தமிழக அளவில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு 2-ம் இடம்: ஆணையர் பெருமிதம் 
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
"ஒரு பைசா கூடத் தொட மாட்டேன்னு சொன்னீங்களே?" - முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் சரமாரி கேள்வி!
திடீர் திருப்பம்! இன்று தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! உங்கள் மாவட்டம் இருக்கா?
திடீர் திருப்பம்! இன்று தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! உங்கள் மாவட்டம் இருக்கா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
Aadhaar App Imp. Update: ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Embed widget