Crime: மும்பையில் ஷாக்! நடுரோட்டில் ஆசிரியரை சரமாரியாக கத்தியால் குத்திய கொடூரம்..கண்டித்ததால் மாணவர் வெறிச்செயல்..!
மும்பையில் நடுரோட்டில் ஆசிரியரை கத்தியால் குத்திய சம்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களுக்கு இணையத்தில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
![Crime: மும்பையில் ஷாக்! நடுரோட்டில் ஆசிரியரை சரமாரியாக கத்தியால் குத்திய கொடூரம்..கண்டித்ததால் மாணவர் வெறிச்செயல்..! Crime Minor stabs ex teacher who told him to focus on studies in mumbai Crime: மும்பையில் ஷாக்! நடுரோட்டில் ஆசிரியரை சரமாரியாக கத்தியால் குத்திய கொடூரம்..கண்டித்ததால் மாணவர் வெறிச்செயல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/13/09d9298c55c4c799c10d34204f564ffb1691919630845572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Crime: மும்பையில் நடுரோட்டில் ஆசிரியரை மாணவர், கத்தியால் குத்திய சம்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கண்டித்த ஆசிரியர்:
மும்பை மீரா என்ற பகுதியில் டியூஷன் நடத்தி வருபவர் தாக்கூர் (26). அதே பகுதியைச் சேர்ந்த இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துகொண்டே டியூஷன் நடத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில், இவரது டியூஷன் சென்டரில் ராஜூ என்ற மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்த மாணவன் சரியாக படிப்பில் ஆர்வம் காட்டாததால் ஆசிரியர் தாக்கூர் அடிக்கடி கண்டித்து வந்துள்ளார்.
இருப்பினும் அந்த மாணவர் படிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்துள்ளார். அடிக்கடி திட்டிக் கொண்டிருப்பதால் ஒரு நாள் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசியும் இருக்கிறார். மேலும், இவர் மாணவிகளுடன் நெருக்கமாக பழகி வந்திருக்கிறார். இதனால், ஆசிரியர் தாக்கூர் மாணவிகளிடம் பேசுவதை தவிர்த்து, படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கண்டித்துள்ளார். இதனால் கடுப்பான அந்த மாணவன் ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர், அந்த மாணவர் டியூஷனுக்கு வருவதையும் நிறுத்தி விட்டார்.
நடுரோட்டில் ஆசிரியரை தாக்கிய மாணவர்:
இந்நிலையில், கடந்த வியாழன்கிழமை ஆசிரியர் தாக்கூர் மும்பை மீரா சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, மாணவர் ராஜூ அவரிடன் சக மாணவர்களுடன் ஒரு கடையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மாணவர் ஆசிரியர் தாக்கூரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பேசிக் கொண்டிருக்கும்போதே கையில் இருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
வயிற்று பகுதியில் பலமுறை குத்தியுள்ளார். பக்கத்தில் உள்ளவர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும், அவர் தாக்கூரை தாக்குவதை நிறுத்தவில்லை. பின்னர், அங்கிருந்த அவர் தப்பியோடினார். இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் தாக்கூரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட மாணவரை கைது செய்துள்ளனர். ஆசிரியர் கண்டித்த ஆத்திரத்தில், மாணவர் அவரை கத்தியால் சரமாரியாக குத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)