மேலும் அறிய

Crime: புதையலுக்காக நரபலி... நண்பனையே கொலை செய்த நபர்... ஒசூர் அருகே பயங்கரம்!

லட்சுமணனின் உடலை குழியில் தள்ளி மணி நரபலி பூஜைகளை செய்துள்ளார். ஆனால், நீண்ட நேரம் காத்திருந்தும் புதையல் கிடைக்காத நிலையில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

புதையல் தோண்டி எடுப்பதற்காக நண்பனைக் கொன்று நரபலி கொடுத்த காவலாளி கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். செப்டெம்பர் 28ம் தேதி தனது விவசாயத் தோட்டத்தில் லட்சுமணன் சந்தேகத்துக்கு உரிய முறையில் கொல்லப்பட்டு கிடந்தார்.

இந்நிலையில் அவரது உடலை மீட்டு கெலமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் லட்சுமணனின் நண்பரான மணி என்பவர், புதையல் எடுப்பதற்காக லட்சுமணனை நரபலி கொடுத்தது கண்டறியப்பட்டது.

லட்சுமணனின் விவசாயத் தோட்டத்தில் புதையல் இருப்பதாக மந்திரவாதி ஒருவர் கூறியதை அப்படியே நம்பிய நண்பர்கள் இருவரும், முன்னதாக மெய்சேரியைச் சேர்ந்த பெண்ணை நரபலி கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் அமாவாசை அன்று குறிப்பிட்ட நேரத்தில் அப்பெண் வராததால் கோழியை பலியிட்டு இருவரும் பூஜையைத் தொடங்கியுள்ளனர். அப்போது திடீரென மணி மீது பாய்ந்த லட்சுமணன் அவரது தொண்டையைக் கடித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதில் சுதாரித்துக் கொண்ட மணி கீழே கிடந்த கட்டையை எடுத்து லட்சுமணனை பலமாகத் தாக்கி கொலை செய்துள்ளார்.

தொடர்ந்து லட்சுமணனின் உடலை குழியில் தள்ளி மணி நரபலி பூஜைகளை செய்துள்ளார். ஆனால், நீண்ட நேரம் காத்திருந்தும் புதையல் கிடைக்காத நிலையில், அங்கிருந்து தான் தப்பியோடியதாக காவல் துறையினரிடம்  மணி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் ஒசூர் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.

மற்றொரு சம்பவம்

இதேபோல் ஆகஸ்ட் மாதம் உத்தரப் பிரதேசம், அம்ரோஹா மாவட்டத்திற்குட்பட்ட மலக்பூர் கிராமத்தில் தன் தம்பி மகனை தம்பதியினர் நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மலக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் தன் 18 மாத ஆண் குழந்தை காணாமல் போனதை அடுத்து தேடி வந்துள்ளார். பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், இரண்டு நாட்கள் கழித்து கிராமத்திற்கு வெளியே உள்ள கரும்புத் தோட்டத்தில் ஒரு குழந்தை ஒன்றின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை செய்தபோது காணாமல்போன ரமேஷ் குமாரின் குழந்தை தான் அது என்று தெரியவந்தது.  இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், ரமேஷ் குமாரின் சகோதரருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் பிறந்து இருந்ததும், மீண்டும் சகோதரின் மனைவி சரோஜா தேவி கர்ப்பமடைந்ததும், குழந்தை நன்றாகப் பிறக்க வேண்டி அவர்கள் சாமியார் ஒருவரைச் சந்தித்ததும், அவர் நரபலி கொடுக்க் கோரியதும் தெரிய வந்ததும்

இதையடுத்து அவர்கள் தனது தம்பி மகன் குழந்தையை நரபலி கொடுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ரமேஷ் குமாரின் அண்ணன் அவரது மனைவி இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

 

தலைப்பு செய்திகள்

துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது நேரிட்ட கொடூரம்: சீர்காழி அருகே உலுக்கிய சோகம்!
துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது நேரிட்ட கொடூரம்: சீர்காழி அருகே உலுக்கிய சோகம்!
சீர்காழி விபத்து எதிரொலி: நட்ட நடுரோட்டில் பேருந்துகளுக்குள் புகுந்து எஸ்பி சினேகா பிரியா அதிரடி வேட்டை!
சீர்காழி விபத்து எதிரொலி: நட்ட நடுரோட்டில் பேருந்துகளுக்குள் புகுந்து எஸ்பி சினேகா பிரியா அதிரடி வேட்டை!
பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
வாடிக்கையாளர் போல் நடித்து 4 மாதமாக 50 சவரன் நகைகள் திருட்டு !! பெண் சிக்கியது எப்படி ?
வாடிக்கையாளர் போல் நடித்து 4 மாதமாக 50 சவரன் நகைகள் திருட்டு !! பெண் சிக்கியது எப்படி ?

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Maruti Victoris Discount: லட்சக்கணக்கில் தள்ளுபடி.! நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸுக்கு மாருதி செம ஆஃபர்
லட்சக்கணக்கில் தள்ளுபடி.! நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸுக்கு மாருதி செம ஆஃபர்
Embed widget