Crime : உயிரிழந்த அம்மா அழைத்ததாக இன்ஸ்டாவில் பதிவு..! சென்னை இளைஞர் தூக்கிட்டு தற்கொலை...
Crime : உயிரிழந்த அம்மா அழைத்ததாக கூறி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தண்டையார்பேட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை : தண்டையார்பேட்டை முருகேசன் தெருவை சேர்ந்தவர் ரஞ்சிதா (29). இவர், தந்தை மற்றும் தம்பி ராஜீ (27) உடன் வசித்து வருகிறார். பாரிமுனையில் தள்ளுவண்டியில் ராஜீ டிபன் கடை நடத்தி வந்தார். இவரது தாய் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். இதனால் அவர் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
தாயை பார்க்க ஆசை:
கடந்த ஒருவாரமாக, 'தாயை பார்க்க ஆசையாக உள்ளது. என்னை அவர் கூப்படுகிறார்' என சகோதரி ரஞ்சிதாவிடம் ராஜீ கூறி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கச் சென்றுள்ளனர். இரவு 11 மணி அளவில் ரஞ்சிதா இயற்கை உபாதை கழிப்பதற்காக எழுந்து வந்தபோது, தம்பி ராஜீ வீட்டில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்து வெளியில் வந்து பார்த்துள்ளார்.
அப்போது, அம்மா அழைப்பதாக நினைத்து ராஜீ வீட்டை விட்டு வெளியே வந்தார். வெளியே வந்ததும் அவரது அம்மா தன்னுடன் வர சொல்வதாக நினைத்து அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டின் கேட் முன்பு சகோதரியின் துப்பட்டாவில் சடலமாக ராஜீ தூக்கில் தொங்கியுள்ளார். ராஜீ காணாமல் போனதை அறிந்த ரஞ்சிதா வீட்டிற்கு வெளியே வந்துபார்த்தபோது, அப்போது ராஜீ தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து ராஜீ உடலை கீழே இறக்கி பரிசோதனை செய்தனர். அதில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
தற்கொலை:
இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட் டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், தாய் இறந்தது முதல் கடந்த 18 வருடங்களாக ராஜீ மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று தாய் தன்னை அழைப்பதாகவும், அவரை பார்க்கவேண்டும் எனவும் கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பின், ராஜீ தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ராஜீ தனது உயிரிழந்த தாய் அழைப்பதாக கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் படிக்க
Crime: தலைக்கு ஏறிய போதை... பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை..!
Watch Video: சுழன்றடித்து நடனமாடி மாஸ் குளியல்...! ட்விட்டரில் லைக்ஸ் அள்ளும் கொரில்லா..!





















