Watch Video: சுழன்றடித்து நடனமாடி மாஸ் குளியல்...! ட்விட்டரில் லைக்ஸ் அள்ளும் கொரில்லா..!
கொரில்லா மகிழ்ச்சியாக பம்பரமாய் சுழன்றபடி குளித்து ஆட்டம்போடும் இந்த வீடியோ ட்விட்டரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களைக் குவித்துள்ளது.
உலகின் வேடிக்கையான மற்றும் அன்பான உயிரினங்களில் ஒன்று கொரில்லாக்கள். அவற்றின் குறும்பான வீடியோக்கள் பொதுவாக காண்போரை மகிழ்விப்பதோடு அவர்களது நாளையே இனிமையானதாக மாற்றக்கூடும்.
அந்த வகையில், கொரில்லா ஒன்று மகிழ்ச்சியுடன் நடனமாடியபடி குளித்து கும்மாளமிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரில்லா மகிழ்ச்சியாக பம்பரமாய் சுழன்றபடி குளித்து ஆட்டம்போடும் இந்த வீடியோ ட்விட்டரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களைக் குவித்து, 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் குவித்து வருகிறது.
Throwback to this Gorilla in a pool dancing to Maniac.pic.twitter.com/5qRl88JeDc
— Fascinating (@fasc1nate) November 29, 2022
இதேபோல் முன்னதாக தன் குழந்தையை முதன்முதலாகப் பார்த்து மெய்சிலிர்த்த சிம்பன்சி ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலானது.
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விச்சிடா நகரில் உள்ள செட்விக் கண்ட்ரி மிருகக்காட்சி சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிசேரியன் மூலம் பிரசவித்த மாலே எனும் இந்த சிம்பன்சி இரண்டு நாள்களுக்குப் பிறகு தன் குட்டியை சந்திக்கச் சென்றுள்ளது.
சிசேரியன் பிரசவத்தில் பிறந்த குட்டிக்கு மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்பட்ட நிலையில், இரண்டு நாள்களாக வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து உடல் நலன் தேறிய குட்டி மீண்டும் தாய் சிம்பன்சியுடன் சேர்க்கப்பட்ட நிலையில், அதனைப் பார்க்க வந்த தாயின் செய்கை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன் குட்டியை பிரசவித்த பிறகு பார்க்காத நிலையில், குட்டி இறந்து விட்டதாக சிம்பன்சி நினைத்துள்ளது. தொடர்ந்து குட்டியை பார்க்க அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், முதலில் தயங்கி தூரமாக நின்று பார்க்கும் தாய் சிம்பன்சி, பின் குட்டி கைகளை நீட்டியதும், ஓடிச் சென்று அதனைத் தூக்கி ஆரத்தழுவி, விம்மியபடி அதனை முத்தமிடுகிறது.
இந்தக் குட்டி குரங்குக்கு குச்சேஸா (Kucheza) எனப் பெயரிடப்பட்டுள்ளதாக முன்னதாக மிருகக்காட்சி சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ 1.2 கோடி பார்வையாளர்களையும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்று வைரலாகி வருகிறது.
‘இதைப் பார்த்து நீங்கள் கண் கலங்கவில்லை என்றால் நீங்கள் மனிதர்களே அல்ல’ என உணர்ச்சிப் பெருக்குடன் கமெண்ட்ஸ் பகிர்ந்து வருகின்றனர் ஃபேஸ்புக் வாசிகள்.
மேலும் படிக்க: Watch Video:மகேந்திர பாகுபலி... மிருகக்காட்சி சாலையில் குழந்தையை தூக்கிக் காட்டி மகிழ்ந்த கொரில்லா!