மேலும் அறிய
Crime: மதுரையில் 2 ரவுடிகள் தரப்பு கோஷ்டி மோதல் - ஒருவர் வெட்டி படுகொலை
இரு ரவுடிகள் தரப்பு கோஷ்டி மோதலில் ரௌடி ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டான் - 5பேர் கைது , 9 பேர் தலைமறைவான நிலையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மாதிரிப்படம்
மதுரை அனுப்பானடி பகுதியில் ரவுடியான ராமர்பாண்டியன் தரப்பினர் இறுதி சடங்கு ஒன்றிற்கு நேற்று சென்றுள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த ராமர்பாண்டியன் தரப்பினர் அந்த வழியாக வந்த பாபி கார்த்திக் என்ற ரவுடியிடம் சென்று வாக்குவாதம் செய்து அடித்துள்ளனர். இதனையடுத்து ராமர்பாண்டியன் தரப்பை சேர்ந்த காளி என்பவர் தனியாக இருக்கும் போது பாபி கார்த்திக்கை தாக்கியுள்ளார்.
இதனையடுத்து ராமர் பாண்டியன் தரப்பு மற்றும் பாபி கார்த்தி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது பாபி கார்த்திக்கை ராமர் பாண்டியன் தரப்பு ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வைத்து கொடூரமாக தாக்கிவிட்டு அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். சம்பவ இடத்தில் சரிந்துவிழுந்த பாபி கார்த்திக் உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தெப்பக்குளம் காவல்துறையினர் பாபி கார்த்தியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனையடுத்து பாபி கார்த்திக் கொலை செய்த வழக்கில் அனுப்பானடி தனசேகரன், வேல் பிரதாப், சுந்தரபாண்டி, பாலமுரளி மற்றும் 17வயது சிறார், ஆகிய 5 பேரை கைது செய்த நிலையில் வழக்கில் தொடர்புடைய மேலும் 9 பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை தேடிவருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Crime: தேனி அருகே சிறுவன் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது - காதல் விவகாரத்தில் கொலை செய்தது அம்பலம்
மேலும் செய்திகள் படிக்க - ஆன்மீகம்: பழனியில் இருந்து மலேசியாவில் உள்ள 10 மலை முருகன் கோயிலுக்கு வஸ்திரம் பிரசாதங்கள் அனுப்பிவைப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















