Crime : சொத்து தகராறு : பெரியப்பாவை குத்திக்கொன்ற இளைஞர் - சென்னையில் கொடூரம்..
சென்னையில் சொத்து தகராறு பிரச்சினையில் பெரியப்பாவை இளைஞரே வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் சொத்து தகராறு பிரச்சினையில் பெரியப்பாவை இளைஞரே வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் ஒன்று ஆர்.ஏ.புரம். இந்த பகுதியில் உள்ள படவட்டான் தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ். அவருடைய வயது 52. இவருடைய மருமகன் மோகன். இவர் அதே பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மருமகன் மோகன்.
சொத்து தகராறு :
பொன்ராஜ் அவருடைய மருமகனுடன் இணைந்து வியாபாரம் செய்து வருகிறார். பொன்ராஜின் மனைவியின் தங்கையை திருமணம் செய்துள்ள அந்தோணிராஜ் என்பவர் தேனாம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அந்தோணிராஜ் மகளை பொன்ராஜ் மருமகனான மோகனின் தம்பியான முத்துமாடசாமிக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். சகோதரர்களான மோகன் மற்றும் முத்துமாடசாமி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
சகோதரர்களான மோகனுக்கும், முத்துமாடசாமிக்கும் அவர்களது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த சொத்தில் தனது பங்கை பிரித்து தரும்படி, முத்துமாடசாமி கேட்டு வந்துள்ளார. இதனால், அண்ணன் மோகனுக்கும், தம்பி முத்துமாடசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
குத்திக்கொலை :
சமீபத்தில் தூத்துக்குடிக்கு சகோதரர்கள் உள்பட உறவினர்கள் அனைவரும் சாமி கும்பிட சென்றனர். சாமி கும்பிட்ட பிறகு அவர்கள் நேற்று முன்தினம்தான் சென்னை திரும்பியுள்ளனர். சகோதரர்களுக்கு இடையேயான சொத்து தகராறு தொடர்பாக, மோகனின் மாமனார் பொன்ராஜூக்கும், அவருடைய தம்பி மகன் அற்புதராஜூக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பொன்ராஜ் வீட்டுக்கு அற்புதராஜ் சென்றார். அப்போது, அவர் தான் மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து பொன்ராஜை சரமாரியாக வெட்டினார். அதில், அவர் ரத்த வெள்ளத்தில் பலத்த காயத்துடன் கீழே சரிந்தார். சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் சரிந்த பொன்ராஜ் உயிரிழந்தார். பின்னர், அற்புதராஜ் சம்பவ இடத்தில் இருந்து பயத்தில் தப்பி ஓடினார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார், உயிரிழந்த பொன்ராஜ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர், அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய கொலையாளி அற்புதராஜை போலீசார் தேடி வருகிறார்கள்.