மேலும் அறிய
Advertisement
காணாமல் போன 4 வயது சிறுவனை வாட்ஸ் அப் குழு மூலம் 5 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்...!
பல்லாவரம் உதவி ஆணையாளரின் துரித நடவடிக்கையால் வாட்ஸ்அப் மூலம் காணாமல் போன குழந்தையை கண்டுபிடித்து ஐந்து மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னையை அடுத்துள்ள பம்மல் கட்டபொம்மன் தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார் (30) இவருடைய ஓரே மகனான 4 வயது குழந்தை அங்குஸ் குமார் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் நீண்ட நேரம் விளையாடி கொண்டு இருந்த குழந்தையை வீட்டிற்கு கூட்டிச் செல்லலாம் என்று பெற்றோர் வீட்டிலிருந்து வெளியே வந்து குழந்தையை பார்த்த போது சிறுவன் காணவில்லை, உடனே அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காததால், சிறுவன் காணாமல் போனது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் சிறுவன் காணாமல் போன இடத்திற்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் பல்லாவரம் துணை காவல் ஆணையாளர் ஆரோக்கிய ரவீந்திரன் காணாமல் போன சிறுவனின் புகைப்படத்தை சமூக வலைதளம் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு புகைப்படங்களை அனுப்பி வைத்து சிறுவனை பார்த்தவுடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்பிறகு சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு வாட்சப்பில், வந்த தகவலை பார்த்து காணாமல் போன சிறுவன் அவரிடம் இருப்பதாக கூறியுள்ளார். விரைந்து சென்ற போலீசார் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பல்லாவரம் உதவி ஆணையாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் வாட்ஸ்அப் மூலம் காணாமல் போன குழந்தையை கண்டுபிடித்து ஐந்து மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. காணமல் போன சிறுவரை விரைந்து கண்டுபித்த பல்லாவரம் போலீசாருக்கு பல்வேறு இடங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
குழந்தைகளை மீட்பு குறித்து காவல்துறை மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, குழந்தை காணாமல் போனது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பெற்றுக்கொண்டு விசாரணையை துவங்கிய பொழுது, விளையாடிக்கொண்டிருந்த குழந்தை வழிதவறி வேறு எங்காவது சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் முதலில் விசாரணையை துவங்கினோம். எனவே குழந்தை காணாமல் போன சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த உள்ளூர் குழுவில், குழந்தை புகைப்படம் மற்றும் குழந்தை காணாமல் போன தகவலை பதிவு செய்தோம்.
அதேபோல் ஆட்டோ ஓட்டுனர்கள் கார் ஓட்டுனர்கள் உள்ளிட்ட நபர்களின் உதவியை நாடினோம். இதன் எதிரொலியாக சில நிமிடங்களில் 100க்கும் மேற்பட்ட குழுவிற்கு தகவல் சென்றது. இதில் காரணமாக குழந்தையை 5 மணி நேரத்தில் மீட்க முடிந்தது. அதேபோல் குழந்தைக்கு கிடைத்துவிட்டது என்று தொடர்பான செய்தியும் அனைத்து குழுவிற்கும் பகிரப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
ஆன்மிகம்
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion