மேலும் அறிய

Crime : பெற்ற மகளை கள்ள காதலனுக்கு தாரைவார்த்த தாய்... 17 வயதில் தாயான சிறுமி.. அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அருகே பெற்ற மகளையே கள்ளக்காதலனுக்கு ஒரு வருடமாக விருந்தாக்கி, பிறந்த குழந்தையையும் மறைந்த தாயின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் 40 வயதான புவனேஸ்வரி. இவரது கணவர் பாரதி என்ற கணவர் இருந்தநிலையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காரணமாக பிரிந்தனர். இதனால், புவனேஸ்வரி தனது 17 வயது மகளுடன் தனியே வசித்து வருகிறார்.

அப்போது, ஓட்டேரி பகுதியை சேர்ந்த 50 வயதான முத்துக்குமார் என்பவருடன் புவனேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடையில் அது தகாத உறவாக மாறியுள்ளது. முத்துக்குமாரும் ஒரு கட்டத்தில் தன் பிள்ளைகளை தனியாக விட்டுவிட்டு புவனேஸ்வரியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், முத்துக்குமாருக்கு புவனேஸ்வரியின் மகள் மீது தனக்கு ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதற்கு புவனேஸ்வரியும் சம்மதம் தெரிவித்ததால் ஒரு வருடமாக முத்துக்குமார் வலுக்கட்டாயமாக மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த 17 வயது சிறுமி கர்ப்பமானார். மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் சிறுமியின் வயது மற்றும் கர்ப்பம் பற்றிய விவரம் தெரிந்து காவல்நிலையத்தில் மாட்டிக் கொள்வோம் என்று இருவரும் பயந்துள்ளனர். இதனால், கர்ப்பிணி தன் மகளுக்கு அவரே வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்துள்ளார்.


Crime : பெற்ற மகளை கள்ள காதலனுக்கு தாரைவார்த்த தாய்... 17 வயதில் தாயான சிறுமி.. அதிர்ச்சி சம்பவம்!

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் புவனேஸ்வரி போலீஸ் பயத்தில் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2 நாட்கள் கழிந்த நிலையில் குழந்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனே ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு குழந்தையை புவனேஸ்வரியும், முத்துகுமாரும் கொண்டு சென்றனர். அங்கிருந்த செவிலியர்கள் 'குழந்தை எங்கு பிறந்தது. குழந்தையின் பெற்றோர் யார்' என கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் "குழந்தையின் தாய்க்கு 19 வயதாகிறது" என்றுள்ளனர். 

இதையடுத்து, 'ஆதார் கார்டு கொடுங்கள். அந்த எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு முறையும் வரும்போது உங்களுக்கான சலுகைகள் கிடைக்கும்` என்று செவிலியர்கள் கூறியுள்ளனர். சிறுமியின் ஆதார் கார்டை புவனேஸ்வரி கொடுத்துள்ளார். அப்போது, சிறுமிக்கு 17 வயதுதான் ஆகிறது என்பது தெரியவந்தது. உடனே சிறுமியின் தந்தை யார் என கேட்டபோது முத்துக்குமார் என்று புவனேஸ்வரி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் குழந்தைகள் நல அமைப்பினர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் கோமதி தீவிரமாக விசாரித்தார். இதை அறிந்ததும் முத்துருமாரும். புவனேஸ்வரியும் தலைமறைவாகி விட்டனர். இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

 

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
Embed widget