மேலும் அறிய

Chennai Crime : விட்டுவிட்டு மது குடித்ததால் ஆத்திரம்...! நண்பரை அடித்தே கொன்ற சக நண்பர்..!

சென்னை, ஆவடியில் தன்னை விட்டுவிட்டு மது குடித்ததால் ஆத்திரமடைந்த நபர் சக நண்பரை அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஆவடி அருகே அமைந்துள்ளது காட்டூர். இந்த பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது வெங்கடேஷ் என்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,வெங்கடேஷின் மரணம் தொடர்பாக காட்டூர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, ஜீவா மற்றும் சிராஜ்சிங் ஆகிய மூன்று பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, மூன்று பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் மூன்று பேரிடமும் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சத்தியமூர்த்திக்கு கடந்த 20-ந் தேதி பிறந்தநாள். இதனால், அவரது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக காட்டூர் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அருகில் உள்ள மைதானத்தில் சத்தியமூர்த்தி அவரது நண்பர்கள் ஜீவா,சிராஜ்சிங் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் மது குடிக்க ஒன்றாக சேர்ந்துள்ளனர்.


Chennai Crime : விட்டுவிட்டு மது குடித்ததால் ஆத்திரம்...! நண்பரை அடித்தே கொன்ற சக நண்பர்..!

4 பேரும் மது அருந்திய பின்னர், சிராஜ்சிங்கை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். பின்னர், மற்ற மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். இதையறிந்த சிராஜ்சிங் தன்னை விட்டுவிட்டு அவர்கள் மூன்று பேரும் மது குடிப்பதால் ஆத்திரம் அடைந்துள்ளார். இதையடுத்து, அவர்கள் குடிக்கும் இடத்திற்கு சென்ற சிராஜ்சிங் தனது நண்பர் யஸ்வந்த் என்பவருடன் சென்றுள்ளார். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த யஸ்வந்த் அங்கிருந்த ஜீவாவை தாக்கியுள்ளார். இதைப்பார்த்த வெங்கடேஷ் யஸ்வந்திடம் தட்டிக்கேட்டுள்ளார்.

அப்போது, கோபமடைந்த யஸ்வந்த் வெங்கடேசின் மார்பு பகுதியில் தனது கையால் பலமாக தாக்கியுள்ளார். இதில், நிலைதடுமாறி பின்புறமாக கீழே விழுந்த வெங்கடேஷின் தலையில் பலமாக அடிபட்டுள்ளது. மேலும், அவரது வாய் மற்றும் மூக்கு பகுதிகளில் இருந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதன்பின்னரே, அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்” எனத் தெரிவித்தனர். 

உயிரிழந்த வெங்கடேஷிற்கு 22 வயதுதான் ஆகிறது. இவரது சொந்த ஊர் சென்னை வியாசர்பாடி சர்மாநகரைச் சேர்ந்த பி.வி.காலனியைச் சேர்ந்தவர். இவருக்கு யாஸ்வினி என்ற பெண்ணை காதலித்து கடந்தாண்டுதான் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 9 மாதக் கைக்குழந்தை உள்ளது. காட்டூர் பெருமாள்கோவில் தெருவில் வசித்து வந்த வெங்கடேஷ், கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் செங்குன்றத்தில் குடும்பத்துடன் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Chennai Crime : விட்டுவிட்டு மது குடித்ததால் ஆத்திரம்...! நண்பரை அடித்தே கொன்ற சக நண்பர்..!

இந்த விவகாரம் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் இதுபற்றி கொலை வழக்குப்பதிவு செய்து யஸ்வந்த் மற்றும் சிராஜ்சிங் ஆகிய இருவரையம் கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Aniruth Arabic Kuthu Dance: விஜய்க்கே டஃப் கொடுப்பாரு போல இருக்கே.. இது அனிருத் அரபிக்குத்து.. வைரலாகும் வீடியோ..!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
Embed widget