Crime: சென்னையில் போதை மாத்திரை விற்பனை கும்பல் கைது..! துப்பாக்கிகள்,கஞ்சா பறிமுதல்..!
சென்னையில் துப்பாக்கிகள், கஞ்சா ஆகியவற்றுடன் போதை மாத்திரை விற்கும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா, போதைமாத்திரைகளின் விற்பனை அதிகளவில் இருந்து வருகிறது. இதனால், இதை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை, ராயப்பேட்டை பகுதியில் போதை மாத்திரை கும்பலைச் சேர்ந்த சிலர் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆயிரம் விளக்கு காவல்நிலைய காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் தலைமையில் தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய சோதனையில் அக்நான் அலி என்பவர் முதலில் கைது செய்யப்பட்டார். அவர் சொன்ன தகவலின் பேரில் ஐஸ் அவுஸ் பகுதியைச் சேர்ந்த முகமது ஷாமீர்கான் மற்றும் முகமது முர்தசில் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் தூக்க மாத்திரைகள் ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டது. ஒன்றரை கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுமட்டுமின்றி அவர்கள் இருவரிடம் இருந்தும் அதிர்ச்சியளிக்கும் விதமாக 4 ஏர்பிஸ்டல் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 2 கத்திகளும் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டது.
துப்பாக்கிகள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தொழிலில் தங்களது எதிரிகளை மிரட்டுவதற்காக இந்த துப்பாக்கிகளை வைத்திருப்பதாக கைதானவர்கள் தெரிவித்தனர். காவல்துறையினர் தொடர்ந்து எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையால் சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக மட்டும் இந்தாண்டில் இதுவரை சுமார் 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 620 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 220 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 10 ஆயிரம் போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த கும்பலிடம் இருந்து 12 மோட்டார் சைக்கிள்கள், 3 கார்கள் மற்றும் ரூபாய் 5 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் பலரும் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : Crime: ஆண் நண்பர்களுடன் பழகாதே: கண்டித்த தாயை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த 17 வயது சிறுமி!
மேலும் படிக்க : Udhagai Crime: மொத்தம் 5 பேர்! வரிசைக்கட்டி மலர்ந்த காதல்! இடையூறாக இருந்த குழந்தை.. மதுவை கொடுத்து கொன்ற தாய்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்