Crime: ஆண் நண்பர்களுடன் பழகாதே: கண்டித்த தாயை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த 17 வயது சிறுமி!
தனது தாயார் முனிய லட்சுமி தன்னை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தியதால் தனது நண்பருடன் சேர்ந்து கழுத்தை அடித்தும் கத்தியால் குத்தியும் கொலை
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வண்ணார் 2வது தெருவில் வசித்து வருபவர் முனியலட்சுமி, இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 குழந்தைகள். மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவரது கணவர் மாடசாமி தாமோதரன் நகரில் உள்ள மற்றொரு வீட்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
முனியலட்சுமி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். சிறுமி பாலிடெக்னிக் படிப்பை தொடர இயலாமல் பாதியில் நிறுத்தி உள்ளார். இந்நிலையில் முனியலட்சுமியின் மகள் அப்பகுதியில் உள்ள ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து பேசியதாக கூறப்படுகிறது. இதனை தாய் முனியலட்சுமி ஆண்களிடம் பழகுவதை கண்டித்து உள்ளார். இதனை தொடர்ந்து நண்பர்களுடன் பேசுவதை கண்டித்த தாயை கொலை செய்ய முடிவு செய்த 17 வயது சிறுமி இன்று காலை தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது தாய் முனியலட்சுமியை தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு தனது இரண்டு ஆண் நண்பர்கள் சென்றதும் காவல்துறைக்கு போன் செய்த சிறுமி, தனது தாயை யாரோ கொலை செய்து விட்டனர் என தெரிவித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது சிறுமி தனது தாயை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறுமியிடம் ஆண் நண்பர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தனது தாயார் முனிய லட்சுமி தன்னை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தியதால் தனது நண்பருடன் சேர்ந்து கழுத்தை அடித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்ததாக தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் சிறுமி மற்றும் அவரது நண்பரான முள்ளக்காடு பகுதியை சேர்ந்த தங்கம் மற்றும் தங்கத்தின் நண்பர் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தூத்துக்குடியில் பிற்பகலில் ஒரு கொலையும் மாலையில் ஒரு கொலையும் அன்று இரவே தூத்துக்குடி சத்யா நகரில் மூதாட்டி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று கோவில்பட்டியில் மனைவின் கண் முன்னே பால்காரர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் என்று பெற்ற தாயை பெற்ற மகளை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.