DSP son arrest : ஜீப் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்! டிஎஸ்பியின் வாகனத்தை இயக்கிய மகன் அதிரடியாக கைது...!
சென்னை கீழ்பாக்கம் பெரியார் சாலையில் டிஎஸ்பி ஜீப் மோதி 45 வயது மதிக்கத்தக்க வங்கி ஊழியர் பலியான நிலையில் டிஎஸ்பி மகன் செய்யப்பட்டுள்ளார்.
![DSP son arrest : ஜீப் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்! டிஎஸ்பியின் வாகனத்தை இயக்கிய மகன் அதிரடியாக கைது...! Chennai bank employee has been Accident in a DSP jeep collision on Periyar Road DSP son arrest : ஜீப் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்! டிஎஸ்பியின் வாகனத்தை இயக்கிய மகன் அதிரடியாக கைது...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/05/c5ffdbb4124c47faa7d7079ed7dc889c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பி குமரனின் 21 வயதான மகன் லோகேஷ், தனியார் கல்லூரியில் பிஇ இறுதியாண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று தனது தந்தையின் அரசு வாகனத்தை எடுத்துக் கொண்டு மதுரவாயலில் இருந்து தனது அம்மாவை ஏற்றிக்கொண்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு மீண்டும் மதுரவாயல் நோக்கி சென்றுகொண்டு இருந்தார்.
அப்பொழுது சென்னை கீழ்பாக்கம் பெரியார் சாலையில் டிஎஸ்பி ஜீப் மோதி 45 வயது மதிக்கத்தக்க வங்கி ஊழியர் மீது மோதினார். இதில் அந்த பெண் படுகாயமடைந்தார்.இதையடுத்து அந்த பெண் கேஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டநிலையில், அந்த பெண் ஊழியர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அரசு வாகனத்தை ஓட்டி மோதிய லோகேஷை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக, லோகேஷ் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மனித உயிருக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது ஆகிய இரு பிரிவுகளின் கீழ் அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அரசுவாகனத்தை மகன் பயன்படுத்தியது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)