மேலும் அறிய

Ramajayam murder: திடீர் ட்விஸ்ட்.! ராமஜெயம் கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட இடம் எது.? குற்றவாளியை நெருங்கிய போலீஸ் .?

திமுகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு விசாரணை குழு திருச்சியில் உள்ள திரையரங்கில் விசாரணை நடத்தியுள்ளது முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமஜெயம் கொலை வழக்கு

தமிழக அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து அதிகாலை வாக்கிங் சென்ற போது மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ராமஜெயத்தின் கொலைக்கு பின்னனியில் யார் உள்ளார்கள் என கடந்த 13 வருடங்களாக பல கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. முதலில் போலீசார் நடத்திய விசாரணையில் துப்பு கிடைக்காததால்,  சி.பி.சி.ஐ.டிக்கும் அதன் பின் சி.பி.ஐக்கும் வழக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இதனையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சி அமைந்த பிறகு ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை வேகமெடுத்தது.

13ஆண்டுகளாக தொடரும் சோதனை

சி.பி.சி.ஐ.டிக்கு வழக்கு மீண்டும் மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சந்தேகத்திற்குரிய 12 ரவுடிகளை தனியாக அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது. ஆனாலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அடுத்ததாக ராமஜெயம் கொலை வழக்கை டி.ஐ.ஜி வருண் குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டு  விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிசிஐடி டிஐஜி யாக இருக்கக்கூடிய வருண் குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து களத்தில் இறங்கிய வருண்குமார், தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்ட முக்கிய ரவுடிகளிடம் ராமஜெயம் கொலை தொடர்பாக நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.  இந்த பரபரப்பான நிலையில் திருச்சியில் பிரபலமான பாலக்கரை அருகே உள்ள காவேரி திரையரங்கில் திடீரென விசாரணை நடத்தினார். 

திரையரங்கில் திடீர் சோதனை

இந்த விசாரணையின் போது திரையரங்க உரிமையாளரிடமும், திரையரங்கில் பணி புரியும் ஊழியர்களிடமும் பலவித கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராமஜெயம் கொலை நடந்த சமயத்தில் அந்த திரையரங்கம் சசிகலாவின் உறவினர் ஒருவருக்கு சொந்தமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பலர் கைக்கு திரையரங்கம் மாறியுள்ளது. எனவே கொலை நடந்த சமயத்தில் திரையரங்கில் வைத்து சதி திட்டம் தீட்டப்பட்டதாக வெளியான தகவல் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. எனவே ராமஜெயம் கொலை வழக்கில் கடந்த 13ஆண்டுகளாக நீடித்து வந்த மர்மம் எப்போது முடிவுக்கு வரும் என திமுகவினர் மட்டுமல்ல தமிழக மக்களும் காத்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பெங்களூர்-சென்னை பேருந்தில் அதிர்ச்சி! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பயணிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!
பெங்களூர்-சென்னை பேருந்தில் அதிர்ச்சி! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பயணிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!
துபாய் தொழிலாளியிடம் ரூ.13 லட்சத்தை அபேஸ் செய்த புதுக்கோட்டை இளைஞர்: 24 மணிநேரத்தில் தட்டி தூங்கிய மயிலாடுதுறை போலீஸ்...
துபாய் தொழிலாளியிடம் ரூ.13 லட்சத்தை அபேஸ் செய்த புதுக்கோட்டை இளைஞர்: 24 மணிநேரத்தில் தட்டி தூங்கிய மயிலாடுதுறை போலீஸ்...
மயிலாடுதுறையில் பயங்கரம்: மதுபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் - சடலத்தின் அருகிலேயே மயங்கிக் கிடந்த அதிர்ச்சி..
மயிலாடுதுறையில் பயங்கரம்: மதுபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் - சடலத்தின் அருகிலேயே மயங்கிக் கிடந்த அதிர்ச்சி..
செல்போன் ஆப் மூலம் பெண் அறிமுகம் !! தனிமையில் சந்திக்க சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி !
செல்போன் ஆப் மூலம் பெண் அறிமுகம் !! தனிமையில் சந்திக்க சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Missile Stuns World: உலக நாடுகளை தெறிக்கவிட்ட ஈரான்; 4000 கிமீ பாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை; அலறும் அமெரிக்கா,பிரிட்டன்
உலக நாடுகளை தெறிக்கவிட்ட ஈரான்; 4000 கிமீ பாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை; அலறும் அமெரிக்கா, பிரிட்டன்
பெங்களூர்-சென்னை பேருந்தில் அதிர்ச்சி! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பயணிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!
பெங்களூர்-சென்னை பேருந்தில் அதிர்ச்சி! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பயணிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!
Tata Cars Price Hike 2026: நீங்க டாடா கார் வாங்குற பிளான்ல இருக்கீங்களா.? அப்போ உடனே ஓடுங்க.. ஏப்ரல் 1-ம் தேதி விலை உயருது
நீங்க டாடா கார் வாங்குற பிளான்ல இருக்கீங்களா.? அப்போ உடனே ஓடுங்க.. ஏப்ரல் 1-ம் தேதி விலை உயருது
ஜஸ்டில் ஜெயிச்ச எம்.எல்.ஏ.க்கள்.. கருணாநிதி முதல் துரைமுருகன் வரை - யார்? யார்?
ஜஸ்டில் ஜெயிச்ச எம்.எல்.ஏ.க்கள்.. கருணாநிதி முதல் துரைமுருகன் வரை - யார்? யார்?
Puducherry Assembly Election : வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு நாளே அவகாசம் – NDA வேட்பாளர்கள் அறிவிப்பு; இண்டியா கூட்டணியில் தொடரும் இழுபறி!
Puducherry Assembly Election : வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு நாளே அவகாசம் – NDA வேட்பாளர்கள் அறிவிப்பு; இண்டியா கூட்டணியில் தொடரும் இழுபறி!
Duster 1.3 Turbo Petrol Review: ஸ்டைல் மட்டும் போதுமா.? புதிய ரெனால்ட் டஸ்டர் 1.3 டர்போ பெட்ரோல் ஓட்டுறதுக்கு எப்படி இருக்கு.? ரிவ்யூவ்
ஸ்டைல் மட்டும் போதுமா.? புதிய ரெனால்ட் டஸ்டர் 1.3 டர்போ பெட்ரோல் ஓட்டுறதுக்கு எப்படி இருக்கு.? ரிவ்யூவ்
Iran Rejects Trump's Offers: “உங்க சலுகையும் வேணாம், போரையும் முடிக்க முடியாது“; கொந்தளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
“உங்க சலுகையும் வேணாம், போரையும் முடிக்க முடியாது“; கொந்தளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
குழந்தை வரம் தரும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்: வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்!
குழந்தை வரம் தரும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்: வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்!
Embed widget