மேலும் அறிய

TN Election 2026: சென்னையின் 16 தொகுதிகள் - திமுக Vs அதிமுக களமிறக்கிய வேட்பாளர்கள் யார்? BJP ஏமாற்றம்

TN Election 2026 Chennai Candidates: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

TN Election 2026 Chennai Candidates: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தலைநகர் சென்னையில் உள்ள தியாகராய நகர் தொகுதியை, கடைசி மாற்றமாக கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டி வருகிறதாம்.

சட்டமன்ற தேர்தல் - சென்னை யாருக்கு?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், மண்டல வாரியாக குறிவைக்கப்பட்டு வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கான பலத்திற்கு ஏற்ப தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், தலைநகர் சென்னையை மட்டும் தங்கள் வசமே வைத்திருக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் பெரும்பாலானவற்றை, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளுமே தங்கள் வசமே வைத்துள்ளன. மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் சென்னையில் இருந்தே இயங்குவதால், இந்த பகுதியை கைப்பற்றுவதில் இரண்டு கட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றன. கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக 15 மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒன்று என, சென்னை மாவட்டம் முழுவதையும் ஆளுங்கட்சியின் கூட்டணியே வென்றது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி தொகுதிகளுக்கான பங்கீடு

திமுக கூட்டணியில் கடந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட வேளச்சேரி தொகுதி மட்டுமே, மீண்டும் அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 தொகுதிகளிலும் ஆளுங்கட்சி நேரடியாக களம் காண்கிறது. அதேநேரம், கடந்த முறை பாஜகவிற்கு 3 தொகுதிகள், பாமகவிற்கு ஒரு தொகுதி என 4 தொகுதிகளை கூட்டணிக்கு வழங்கிவிட்டு, 12 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் கண்டது. ஆனால், இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு 3 தொகுதிகளை மட்டும் வழங்கிவிட்டு, 13தொகுதிகளில் நேரடியாக களம் காண முடிவெடுத்துள்ளது. அதன்படி பாஜகவிற்கு மயிலாப்பூர், அமமுகவிற்கு சைதாப்பேட்டை மற்றும் பாமகவிற்கு பெரம்பூர் ஆகிய தொகுதிகள் இந்த முறை வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பிரதான கூட்டணி சார்பில், தலைநகர் சென்னையில் களமிறங்கும் வேட்பாளகள் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சென்னை 16 தொகுதிகள் - திமுக Vs அதிமுக கூட்டணி வேட்பாளர்கள்

எண் தொகுதி திமுக+ வேட்பாளர் அதிமுக+ வேட்பாளர்
1 ஆர்.கே. நகர் ஜே.ஜே. எபினேசன் R.S.  ராஜேஷ்
2 பெரம்பூர் ஆர். டி. சேகர் பாமக
3 கொளத்தூர் மு.க. ஸ்டாலின் P. சந்தானகிருஷ்ணன்
4 வில்லிவாக்கம் கார்த்திக் மோகன் S.R. விஜயகுமார்
5 திரு.வி.க. நகர் கே.எஸ். ரவிச்சந்திரன் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் 
6 எழும்பூர் தமிழன் பிரசன்னா அபிஷேக் ரங்கசாமி
7 ராயபுரம் சுபேர்கான் டி.ஜெயக்குமார்
8 துறைமுகம் பி.கே. சேகர் பாபு ராயபுரம் R. மனோ
9 சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி உதயநிதி ஸ்டாலின் ஆதிராஜாராம்
10 ஆயிரம் விளக்கு எழிலன் வளர்மதி
11 அண்ணா நகர் நே. சிற்றரசு கோகுல இந்திரா 
12 விருகம்பாக்கம் பிரபாகர் ராஜா வி.என். ரவி
13 சைதாப்பேட்டை மா. சுப்ரமணியன் செந்தமிழன் (அமமுக)
14 தியாகராய நகர் ராஜா அன்பழகன் தி.நகர் சத்யா
15 மயிலாப்பூர் தா. வேலு தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக உத்தேச வேட்பாளர்)
16 வேளச்சேரி அசன் மௌலானா (காங். உத்தேச வேட்பாளர்) M.K. அசோக்

12 தொகுதிகளில் வேட்பாளர்கள் யார்?

திமுக தரப்பில் சென்னையில் போட்டியிடப்போவது யார் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால், அதிமுக சார்பில் இரண்டு கட்ட வாக்காளர் பட்டியல் வெளியானாலும், ராயபுரத்தில் டி.ஜெயக்குமார் போட்டியிடுவார் என்பது மட்டுமே உறுதியாகியிருந்தது. காரணம், சென்னை மாவட்டத்தில் திமுக பலமாக இருப்பதால் அவர்களது வேட்பாளர்கள் விவரங்கள் வெளியானதும், அவர்களுக்கு போட்டியாக சரியான நபர்களை களமிறக்க எடப்பாடி பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. உட்கட்சி பூசலை தடுக்கும் விதமாகவும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாம். இதுபோக, பாஜக தரப்பில் இருந்து சென்னையில் கூடுதலாக ஒரு தொகுதியை பெறுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் தான், சென்னை மாவட்டத்தின் 12 தொகுதிகள் உட்பட அதிமுகவிற்கான, மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் எடப்பாடி மூன்றாம் கட்டமாக இன்று அறிவித்துள்ளார்.

பாஜக ஏமாற்றம்

இதனிடையே, தியாகராய நகர் தொகுதியை கைப்பற்ற பாஜகவின் வினோஜ் பி. செல்வம் தரப்பு முயன்று வந்தது. இதனை வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் அண்மையில் கமலாலயம் முன்பு தர்ணாவிலும் ஈடுபட்டு இருந்தனர். இதுபோக ஆலங்குடி போன்ற தொகுதிகளை மாற்றி தரவேண்டும் என்பது தொடர்பான கோரிக்கைகளையும் பாஜக முன்வைத்ததாம். கடந்த முறை சென்னையில் தங்களுக்கு 3 தொகுதிகளை ஒதுக்கிய நிலையில், இந்த முறை ஒன்று மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால் கோரிக்கையை தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதாம். ஆனால், அவர்களது எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கும் விதமாக தியாகராய நகர் மற்றும் ஆலங்குடி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் எடப்பாடி அறிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget