மேலும் அறிய

MDMK Candidate: மதிமுக-வின் வேட்பாளர்கள் யார்? யார்? பட்டியலை வெளியிட்டார் வைகோ!

மதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் அனல்பறக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக கூட்டணி களமிறங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்து, இன்று தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

திமுக வேட்பாளர்களை அறிவித்த உடனே ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள மதிமுக தங்களது வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது.

மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? யார்?

1. மொடக்குறிச்சி - செந்தில் நாதன்

2. மதுரை தெற்கு - பூமிநாதன்

3. கடையநல்லூர் - ராஜேந்திரன்

4. சீர்காழி - செந்தில் செல்வன்

இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும் மற்றொரு 3 தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் மதிமுக போட்டியிடுகிறது. அவர்களது தனிச்சின்னம் என்னவென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.

வாய்ப்பு மறுப்பு:

கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக இந்த தேர்தலில் 4 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகின்றனர். கடந்த முறை வாய்ப்பு பெற்ற பூமிநாதனுக்கு மட்டுமே இந்த முறை வாய்ப்பு கிடைத்துள்ளது. ரகுராமன், முத்துரத்தினம், சாத்தான் திருமலைக்குமார் என வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை பெற்ற மதுரை தெற்கு தொகுதியை மட்டும் மீண்டும் இந்த முறை மதிமுக பெற்றுள்ளது. இந்த தேர்தலில் வைகோ போட்டியிடவில்லை.  கடந்த மக்களவைத் தேர்தலில் அவர்கள் பம்பர சின்னத்திற்கு பதிலாக தீப்பெட்டிச் சின்னத்தில் போட்டியிட்டனர். இந்த தேர்தலிலும் அவர்கள் அதே சின்னத்தில் போட்டியிடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

விரைவில் பரப்புரை:

மதிமுக-வின் முக்கிய நிர்வாகி மல்லை சத்யா விலகியுள்ள நிலையில், மதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற்று தங்களது நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்த ஆர்வம் காட்டி வருகிறது. விரைவில் சட்டமன்ற தேர்தலுக்காக மதிமுக தங்களது பரப்புரையை மேற்கொள்ளும் என்று கருதப்படுகிறது.

வைகோ உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருக்கும் சூழலில், அவரது மகன் துரை வைகோ தீவிர பரப்புரையில் ஈடுபடுவார் என்று கருதப்படுகிறது. 

வேட்பாளர்கள் அறிவிப்பு:

இன்று திமுக தாங்கள் போட்டியிட உள்ள 164 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், கூட்டணி கட்சியான தேமுதிக-வும் தாங்கள் போட்டியிட உள்ள 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் தங்கள் வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது.

காங்கிரஸ் தாங்கள் போட்டியிடும் 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விரைவில் அறிவிப்பார்கள் என்று கருதப்படுகிறது. கூட்டணி கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் நாளை மறுநாளுக்குள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினர் தலைமையில் மிகப்பெரிய மாநாடு நடத்தப்படும் என்று கருதப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget