மேலும் அறிய

IPL 2026 RCB vs SRH: வெற்றியுடன் தொடங்கிய RCB! கோலி, படிக்கல், ரஜத் ஃபயர் பேட்டிங்!

IPL 2026 SRH vs RCB: தொடரின் 19வது சீசனின் முதல் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 2026ம் ஆண்டின் முதல் போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் நேருக்கு நேர் மோதின.

202 ரன்கள் டார்கெட்:

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஜேக்கப் டஃபியின் பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் தொடக்கத்தில் தடுமாறினாலும் கிஷானின் அபாரமான 80 ரன்கள், அனிகெத் வர்மாவின் அதிரடியாக 43 ரன்கள் உதவியுடன் 202 ரன்களை இலக்காக ஆர்சிபிக்கு நிர்ணயித்தது.

படிக்கல் அபாரம்:

IPL 2026 RCB vs SRH: வெற்றியுடன் தொடங்கிய RCB! கோலி, படிக்கல், ரஜத் ஃபயர் பேட்டிங்!

இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கா விராட் கோலி - பில் சால்ட் ஆட்டத்தை தொடங்கினர். சால்ட் அதிரடியாக 2 பவுண்டரி விளாசினாலும் 8 ரன்களில அவுட்டானார். அடுத்து இம்பேக்ட் வீரராக தேவ்தத் படிக்கல் களமிறங்கினார். களமிறங்கியது முதலே படிக்கல் அதிரடி காட்டினார்.

நிதிஷ் ரெட்டி, உனத்கட், பெய்ன் என யார் வீசினாலும் அதிரடியாக ஆடினார். இதனால், ஆர்சிபியின் ரன்ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. கோலி மறுபுறம் அவருக்கு ஓரிரு ரன்களாக எடுத்து ஒத்துழைப்பு அளிக்க படிக்கல் பவுண்டரி, சிக்ஸராக விளாசினார். 

8.1 ஓவர்களில் 100 ரன்கள்:

கேப்டன் இஷான் கிஷன் கீப்பிங்கில் சொதப்பியதுடன் கிளாசென் விராட் கோலி கொடுத்த கேட்ச்சையும் தவறவிட்டார். அபாரமாக ஆடிய தேவ்தத் படிக்கல் 21 பந்துகளில் அரைசதம் விளாசினார். ஆர்சிபி அணியும் 8.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் இளம் வீரர் ஹர்ஷ் துபே பந்தில் பவுண்டரி, சிக்ஸர் என அடுத்தடுத்து விளாசினார். ஆனால், அதே ஓவரில் அடுத்த சிக்ஸர் அடிக்க முயற்சித்து அவுட்டானார்.

தேவ்தத் படிக்கல் 26 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 61 ரன்கள் எடுத்து அவுட்டாக, அடுத்து ரஜத் படிதார் - கோலியுடன் ஜோடி சேர்ந்தார். கோலி தனது ஆட்டத்தில் வேகத்தை ஏற்ற ஆர்சிபி வெற்றிக்கு கடைசி 60 பந்துகளில் 76 ரன்கள் தேவைப்பட்டது.

ரஜத் அதிரடி:

கோலியுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரஜத் படிதார் அதிரடி காட்டினார். இந்த பார்டனர்ஷிப் 23 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய ரஜத் படிதார் 12 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா வந்த முதல் பந்தே உனத்கட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

163 ரன்களுக்கு ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. 45 பந்துகளுக்கு 39 ரன்கள் ஆர்சிபி அணிக்கு தேவைப்பட்டது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் பொறுப்புடன் ஆடிய விராட் கோலி 33 பந்துகளில் அரைசதம் விளாசினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அவருக்கு இது 60வது அரைசதம் ஆகும். 

ஆர்சிபி வெற்றி:

ஹர்ஷல் படேல் வீசிய 16வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி, பவுண்டரி, பவுண்டரி என அடுத்தடுத்து விளாசி ஆட்டத்தை வெற்றிகரமாக விராட் கோலி முடித்து வைத்தார். 15.4 ஓவர்களில் 203 ரன்களை எடுத்து ஆர்சிபி நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 38 பந்துகளில் 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 69 ரன்கள் எடுத்தார். டிம் டேவிட் 10 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 16 ரன்கள் எடுத்திருந்தார்.

தலைப்பு செய்திகள்

Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget