மேலும் அறிய

DMDK Candidate List: தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்! பிரேமலதா, விஜயபிரபாகர் எங்கு போட்டி?

திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள தேமுதிக தாங்கள் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக தங்களது வேட்பாளர்களை இன்று அறிவித்தது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள தேமுதிக தாங்கள் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது.

தேமுதிக வேட்பாளர்கள் யார்? யார்?

பல்லாவரம் - அனகை டி.முருகேசன்

விருதுநகர் - விஜயபிரபாகர்

திருத்தணி - டி. கிருஷ்ணமூர்த்தி

குடியாத்தம் - கேபி பிரதாப்

தருமபுரி - இளங்கோவன்

சேலம் மேற்கு - அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்

ஓமலூர் - ஏ.ஆர்.இளங்கோவன்

மயிலம் - வெங்கடேசன்

போளூர் - டி.பி.சரவணன்

விருத்தாச்சலம் - பிரேமலதா 

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள தேமுதிக, கடைசி நேரத்தில் தேர்தலில் கூட்டணியில் இடம்பிடித்து 10 தொகுதிகளை கைப்பற்றியது.

திமுக கூட்டணியில் தேமுதிக:

தேமுதிக கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, கடந்த 10 ஆண்டுகளாக எந்த சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. இதனால், இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக களமிறங்குகிறது. 

விஜயகாந்த் மறைவிற்கு பிறகு தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். இதனால், அவரது மறைவிற்கான அனுதாப வாக்குகளும் தேமுதிக-விற்கு கிடைக்கும். தேமுதிக-வைப் பொறுத்தமட்டில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பே திமுக கூட்டணியில் இணைந்தனர்.

10 தொகுதிகள்:

அவர்களது சமயோஜிதத்தால் அவர்களுக்கு 10 தொகுதிகள் கிடைத்தது. மேலும், ஒரு ராஜ்யசபா சீட் கிடைத்து எல்.கே.சுதீ்ஷ் மாநிலங்களவை உறுப்பினரானார். அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக எந்த தேர்தலில் வெற்றி பெறாத விரக்தியில் இருந்த தேமுதிக-வினர் திமுக கூட்டணியில் இந்த தேர்தலில் போட்டியிடுவதால் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், அவர்களுக்குத் தேவையான தொகுதிகளையும் அவர்கள் கேட்டுப் பெற்றுள்ளனர். வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிக தங்களது பரப்புரையை நாளை முதல் தீவிரமாக மேற்கொள்ள உள்ளனர்.  விஜயபிரபாகர் கடந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது அதே விருதுநகர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுகிறார். பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். விஜயகாந்த் முதன்முறையாக இதே தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
Embed widget