மேலும் அறிய

கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர் !! மாணவி அளித்த புகாரால் பரபரப்பு

பண உதவி செய்வது போல் கல்லூரி மாணவியிடம் பழகி , பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்

புகாரளித்த மாணவி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 - ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி 4 - ம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறேன்.

எனது ஏழ்மையை பயன்படுத்தி பல்கலைக் கழகத்தில் இன்டர்ஸ்டியல் பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வரும் ஞானவேல்பாபு என்பவர் அடிக்கடி பணம் உதவி செய்து வந்தார். அதை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு எனக்கு செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வருகிறார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

நேரில் பார்க்கும் போது தவறான நோக்கத்தில் தன் மீது கை வைத்து பாலியல் தொந்தரவு கொடுக்கிறார். இது போல் கடந்த 3 ஆண்டுகளாக பேராசிரியர் ஞானவேல் பாபு தன்னை தொடர்ந்து பல்வேறு வகையில் பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். என்னை போல் விடுதியில் தங்கி படிக்கும் பல மாணவிகளுக்கும் அவர் பணம் உதவி வழங்கி பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை கமிஷனர் வனிதா தலைமையில் உடனே குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி துணை கமிஷனர் வனிதா தலைமையிலான குழுவினர் மாணவி அளித்த புகாரின் மீது கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பாலியல் தொந்தரவு செய்து என 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மாணவிக்கு மிரட்டல்

பேராசிரியர் ஞானவேல் பாபு மீது மாணவி அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீது பல்கலைக்கழக நிர்வாகம் அவரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பேராசிரியர் ஞானவேல் பாபு, புகார் அளித்த மாணவிக்கு அடிக்கடி போன் செய்து மிரட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவி தனது பாதுகாப்புக்காக வேறு வழியின்றி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பேராசிரியர் ஞானவேல் பாபு மீது புகார் அளித்தது தெரிய வந்தது.

அதே நேரம் போலீசார் அவரை தொடர்பு கொண்ட போது, அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று அச்சத்தில் அவர், இரவோடு இரவாக தலைமறைவானது தெரிய வந்தது. அதை தொடர்ந்து தனிப்படை போலீசார் சைபர் க்ரைம் உதவியுடன் பேராசிரியர் இருக்கும் இருப்பிடத்தை தனிப்படையினர் ஆய்வு செய்த போது, அண்ணாபல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபு நெல்லையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து தனிப்படை போலீசார் நெல்லை போலீசார் உதவியுடன் நேற்று பேராசிரியர் ஞானவேல் பாபுவை கைது செய்தனர். அவரை சென்னைக்கு தனிப்படை போலீசார் அழைத்து வருகின்றனர்.

அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பிறகு தான், புகார் அளித்த மாணவி போல் வேறு மாணவிகளுக்கு உதவி செய்வது போல் பாலியல் தொந்தரவு செய்தாரா என்று தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் புகார் அளித்த மாணவி தனது புகார் மனுவில் தன்னை போல் பல மாணவிகள் அவரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் பேராசிரியர் ஞானவேல் பாபு அவர் பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விடுதியில் தங்கி படிக்கும் ஏழ்மையான மாணவிகளை குறிவைத்து தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் பேராசிரியர் ஞானவேல் பாபு உடன் வேறு யாரேனும் பேராசிரியர்கள் உள்ளார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!
திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget