வங்காளதேசம் டூ இந்தியா! நடந்தே எல்லையைக் கடந்த சிறுமி! காரணத்தைக் கேட்டு ஷாக் ஆன பாதுகாப்புப் படை!
வங்காளதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது தந்தைக்கு பயந்து வீட்டில் இருந்து வெளியேறி நடந்தே இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். அவரை பாதுகாப்பு படை வீரர்கள் மீட்டுள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடு வங்காளதேசம். இந்தியா மற்றும் வங்காளதேச எல்லை மிகவும் பெரிய எல்லை ஆகும். கடத்தல், தீவிரவாதிகள் அச்சுறுத்தல், சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறுதல் மற்றும் நாட்டை விட்டு வெளியேறுதல் உள்ளிட்ட விவகாரங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக இந்த எல்லையில் பி.எஸ்.எப். எனப்படும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மதியம் மேற்கு வங்காளத்தில் உள்ள இந்தியா – வங்காளதேச எல்லையில் ஒரு சிறுமி ஊடுருவியதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, உடனடியாக அந்த சிறுமியை மீட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுமி வங்காளதேசத்தில் உள்ள ஜெனடைா என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அந்த சிறுமிக்கு 15 வயதே ஆகிறது என்றும் தெரியவந்தது. இந்த மாவட்டத்தில் உள்ள பான்ஸ்பேரியாதான் இந்த சிறுமியின் சொந்த ஊர் என்பதையும் அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்தனர். அந்த சிறுமியிடம் பணமோ, மாற்று உடையோ என்று வேறு எதுவுமே இல்லை என்பதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இந்த சிறுமியின் தந்தை சிறுமியை அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாலும், பல சமயங்களில் காரணமே இல்லாமல் துன்புறுத்தியதாலும் அந்த சிறுமி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால், வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த சிறுமி எல்லையை கடந்து இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளார். அவரது கிராமத்தில் இருந்து இந்தியா- வங்காளதேச சர்வதேச எல்லை 3 கிலோ மீட்டர் மட்டுமே என்பதால், வீட்டில் இருந்து நடந்தே வந்து அந்த சிறுமி எல்லையை கடந்துள்ளார்.
அந்த சிறுமிக்கு அறிவுரை கூறி மீண்டும் அவரது நாட்டிற்கே அனுப்பி வைக்க பாதுகாப்பு படையினர் முடிவு செய்தபோது, அந்த சிறுமி தனது வீட்டிற்கு செல்ல மறுப்பு தெரிவித்துவிட்டார். பின்னர், அந்த சிறுமியை குழந்தைகள் தன்னார்வ அமைப்பு ஒன்றிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், வங்காளதேச எல்லை பாதுகாப்பு அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியா – வங்காளதேச சர்வதேச எல்லை மிகவும் பெரியது ஆகும். மொத்தமுள்ள 4 ஆயிரத்து 96 கி.மீட்டரில் மேற்கு வங்காளத்தில் மட்டும் 2 ஆயிரத்து 216 கி.மீட்டர் எல்லை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Crime | தகாத உறவுக்கு மறுத்ததால் ஆத்திரம்.. நண்பரின் மனைவியைக் கொன்று, சோபாவுக்குள் மறைப்பு.. செருப்பால் பிடிபட்ட குற்றவாளி..
மேலும் படிக்க : Crime | 300 ரூபாய் தராததால் கொடூரம்.. மனைவி கண்முன்னே கணவனைக் குத்திக் கொன்றவர் கைது..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்